கியூபா தனித்து விடப்படவில்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 100 நாடுகளின் கட்சிகள் முழக்கம்!
ஹவானா, பிப். 15- கியூபாவுக்கு எதிரான அமெரிக்கா வின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, உலகம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழி லாளர் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டறிக்கை யை வெளியிட்டுள்ளன. கியூபப் புரட்சியின் மகத்தான சாதனைகளைச் சிதைக்கவும், அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திச் சோசலிசப் பாதையை முடக்கவும் அமெரிக்க அரசு தொடர்ச்சியான தடைகளை விதித்து வருகிறது. குறிப்பாக, வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா பல சதித்திட்டங்களை மேற்கொண்டுள் ளது. எந்த நாடாவது கியூபாவிற்கு எரி பொருள் விநியோகம் செய்தால், அந்த நாட்டின் மீது கூடுதல் வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கியூபாவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள துடன், மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட முடியா மல் நாடே முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில்தான், உலகெங்கிலும் உள்ள இடதுசாரி சக்திகள் கியூபாவிற்குத் தங்களின் தார்மீக ஆதரவை வழங்க முன் வந்துள்ளன. கியூபாவின் இறை யாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராகவும், கியூப மக்களின் உரி மைகளுக்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டுள்ள புதிய ஆக்கிரமிப்பு நடவடிக் கைகளை இக்கட்சிகள் வன்மை யாகக் கண்டிக்கின்றன. மன்ரோ கோட்பாடும் உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும் கியூபாவை ஒரு “அசாதாரண மற்றும் விசித்திரமான அச்சுறுத் தல் நாடு” எனச் சித்தரிக்கும் அமெ ரிக்க ஜனாதிபதியின் நிர்வாக உத்த ரவு குறிப்பு, முழுக்க முழுக்கப் பொய் களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என இந்தக் கூட்ட றிக்கை சாடுகிறது. 60 ஆண்டுகளுக் கும் மேலாக நீடிக்கும் சட்ட விரோதப் பொருளாதாரத் தடையை மேலும் தீவிரப்படுத்தவே அமெரிக்கா இத்தகைய இழிவான பிரச்சாரத்தைச் செய்கிறது. இதன் மூலம் கியூப மக்களின் அடிப் படை வாழ்வாதாரத்தையும், மருத்துவ மற்றும் உணவுத் தேவை களையும் சிதைக்க அமெரிக்கா வஞ்சகமாக முயல்கிறது. சர்வதேசச் சட்டங்களையும், ஐ.நா. அவையின் சாசனங்களையும் அப்பட்டமாக மீறும் அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியை ‘அமைதி மண்டலமாக’ அறிவித்த பிரகட னத்திற்கு எதிரானது. இது ஒட்டுமொத்தப் பிராந்தியத் தின் மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்த அமெரிக்கா வைத்துள்ள ‘மன்ரோ கோட்பாட்டின்’ (Monroe Doctrine) ஒரு பகுதியாகும். இது கியூபாவுக்கு மட்டுமல்லாமல் வெனிசுலா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளின் இறையாண்மைக்கும் விடுக்கப் பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தத் தாக்குதலானது கியூப மக்களுக்கு மட்டுமல்ல, உல கெங்கிலும் உள்ள உழைக்கும் மக்க ளுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்த லாகும். இதற்கு எதிராகத் தொழி லாளர்களும் மக்களும் உறுதியான போராட்டத்தையும், சர்வதேச ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சர்வதேச ஒருமைப்பாடும் ஆதரவுக் கரங்களும் தைரியம், உறுதி மற்றும் சர்வ தேச ஒத்துழைப்பிற்கு முன்மாதிரி யாகத் திகழும் கியூபாவை உலகப் புரட்சிகரக் கட்சிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. கியூபா மீதான சட்டவிரோதத் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐநா பொது அவையின் தீர்மா னங்களின் அடிப்படையில் இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுதுள்ளன. சோசலிச கியூபாவுடன் உலக ளாவிய இடதுசாரி சக்திகள் எப்போ தும் துணை நிற்கும் என்றும், கியூபா தனித்து விடப்படவில்லை என்பதை உரக்கச் சொல்வதாகவும் அந்த அறிக்கை உறுதிபடக் கூறுகிறது. இந்த முக்கியக் கூட்டறிக்கை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, அமெரிக்க கம்யூ னிஸ்ட் கட்சி, ஈரான் துடே கட்சி, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி, வங்க தேச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மத்திய கிழக்கு, தென்ன மெரிக்கா மற்றும் ஆசிய நாடு களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கையெழுத் திட்டுள்ளன. கியூபாவின் சுதந்தி ரத்தைப் பாதுகாப்பதற்கும், அந்நாட்டு மக்கள் தங்கள் எதிர்கா லத்தைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உறுதி செய்யவும் உல களவில் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
