86 பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டல்
பெரம்பலூர், பிப்.4 - பெரம்பலூர் மாவட் டம், வேப்பூர் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமரா ஜர் திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியில் 13 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டி டம் கட்டும் பணி, 15 ஆவது நிதிக்குழு மானி யம், மாநில நிதிக்குழு மானியம், கனிமம் மற்றும் சுரங்கங்கள் நிதி, நம்ம ஊரு நம்ம அரசு உள் ளிட்ட பல்வேறு திட்டங் களின்கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கள் உள்ளிட்ட ரூ.12 கோடியிலான 86 பணிகளுக்கு, தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அடிக் கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.
ஓய்வூதியர் சங்க அமைப்பு தின கொடியேற்றம்
திருவாரூர், பிப்.4 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மையத்தின் சார்பாக அமைப்பு தின விழா கொடியேற்றம் நடை பெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஜி.காசி வரவேற்றார். சேந்தமங்க லம் கிளைத் தலைவர் ஆர்.கணபதி அமைப்பு தின கொடியை ஏற்றி னார். மாநில துணைத் தலைவர் குரு.சந்திர சேகரன் சிறப்புரையாற்றி னார். முன்னதாக திரு வாரூர், கூத்தாநல்லூர், பனங்குடி மற்றும் குட வாசலைச் சேர்ந்த நிர்வா கிகள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். இதேபோல் முத்துப் பேட்டையில் கிளைத் தலைவர் ரெங்கசாமி தலைமையில், மாவட்ட இணைச் செயலாளர் சி.செல்லத்துரை சிறப்பு ரையாற்றினார்.
பிப்.8 குரூப் 2, 2ஏ தேர்வு
கரூர், பிப்.4 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி மைப் பணிகள் தேர்வு-II (தொகுதி–II மற்றும் IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், கரூர் மாவட் டத்தில் 8.2.2026 அன்று முற்பகல் மற்றும் பிற் பகல் இரு வேளை களிலும் தாந்தோணி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற வுள்ளது. மேற்காணும் தேர்வில் முற்பகல் 108 தேர்வாளர் களும், பிற்பகல் 111 தேர்வாளர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக் கூட அனுமதி சீட்டு (Hall Ticket) உள்ள தேர் வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக் கப்படுவர். தேர்வு நாளன்று முற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள், காலை 08.30 மணிக்குள் ளும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் மதி யம் 01.30 மணிக்குள்ளும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்தார்.
ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளை கண்டித்து தர்ணா
தஞ்சாவூர், பிப்.4 - ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், புதுக்கோட்டை மாவட்டக் குழுக்களின் சார்பில் தஞ்சா வூர் பனகல் கட்டிடம் முன்பு புதன்கிழமை பெருந்திரள் தர்ணா போராட்டம் நடை பெற்றது. போராட்டத்துக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர்கள் என்.வி.கண் ணன் (தஞ்சாவூர்), எம்.சேகர் (திருவாரூர்), கே.சித்தார்த் தன் (நாகப்பட்டினம்), ஏ. ராமைய்யன் (புதுக்கோட்டை), ஆர்.நடராஜன் (திருச்சி புற நகர்), நா.கார்த்திகேயன் (திருச்சி மாநகர்), ஆர்.மணி வேல் (அரியலூர்), ஏ.கே.ராஜேந்திரன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலை வர்கள் கே.முகமதுஅலி, வி.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர்கள் பி. செந்தில்குமார் (தஞ்சா வூர்), எஸ்.தம்புசாமி (திரு வாரூர்), எம்.என்.அம்பிகா பதி (நாகப்பட்டினம்), டி. சிம்சன் (மயிலாடுதுறை), எஸ்.பொன்னுசாமி (புதுக் கோட்டை), வி.சிதம்பரம் (திருச்சி புறநகர்), கே.சி.பாண்டியன் (திருச்சி மாநகர்), என்.செல்லத்துரை (பெரம்பலூர்), செந்தில் குமார் (அரியலூர்), வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர். வாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் 9 மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திருவாரூரில் ரூ.1.32 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவாரூர், பிப்.4 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாது காப்புத் திட்டப் பயன்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமின் அடிப்படையில், நலத்திட்ட பயன்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய் யும் “என் கனவு என் எதிர்காலம்” இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதனையொட்டி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி யில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 126 பயனாளி களுக்கு ரூ.1,32,85,650 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 4406 பயனாளிகளுக்கு முதி யோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பிற ஓய்வூதியத் தொகைக்கான ஆணையை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர். இத்திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப் பட்ட 185 முகாம்களில், 87,684 மனுக்கள் பெறப்பட்டு, 67,098 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, நகர்மன்றத் தலைவர்கள் மன்னை த.சோழராஜன் (மன்னார்குடி), கவிதா பாண்டியன் (திருத்துறைப்பூண்டி), பாத்திமா பஷிரா தாஜ் (கூத்தாநல்லூர்) மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
3 ஆம் காலாண்டில் சியுபி வங்கி வருவாய் ரூ.2,001 கோடி உயர்வு நிர்வாக இயக்குநர் என்.காமகோடி தகவல்
மன்னார்குடி, பிப்.4 - கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2025-26 ஆம் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டு கணக்கு முடிவை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் என்.காமகோடி சென்னையில் வெளியிட்டார். வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி அவர் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் 3 ஆம் காலாண்டின் வங்கியின் மொத்த வருமானம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து ஒரு கோடியாக உள்ளது. இதர வருமானம் 7 சதவீதம் உயர்ந்து ரூ.245 கோடியாக உள்ளது. மொத்த லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ.513 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.332 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் வங்கியின் மொத்த வியாபாரம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.1,31,408 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்புத் தொகை மற்றும் கடன்கள் முறையே 21 சதவீதம் உயர்ந்து ரூ.70,516 கோடியாகவும், ரூ.60,892 கோடியாகவும் உள்ளது. மேலும் டிசம்பருடன் முடிந்த 9 மாதத்தில் வங்கியின் மொத்த வருமானம் 16 சதவீதம் உயர்ந்து, ரூ.5,762 கோடியாகவும், அதில் இதர வருமானம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.748 கோடியாகவும் மொத்த லாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,435 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.967 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் 0.78 சதவீதமாகவும், வங்கி சொத்தின் மீதான வருவாய் 1.53 சதவீதமாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்தாண்டில் இருந்த மதிப்பான ரூ.9,118 கோடியில் இருந்து ரூ.10,157 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 902 கிளைகள் மற்றும் 1,678 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களை கொண்டு செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பகோணத்தில் சிக்னல் துவக்கம் கும்பகோணம், பிப்.4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, கும்பகோணம் - நால்ரோடு சந்திப்பில் கும்ப கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங் தலைமையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை கும்பகோணம்-நால்ரோடு சந்திப்பில் இயங்கி வந்த பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் தற்சமயம் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பேங்க் ஆப் பரோடா அருகே பேருந்தை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் சிறியமலர் மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்தை நிறுத்தி பொது மக்களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். செட்டி மண்டபம் வழியாக வரும் அனைத்து பேருந்துகளும் மஹா ராஜா மஹால் அருகே பேருந்தை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். போக்குவரத்துக்கு இடையூ றாக சிக்னல் அருகே பேருந்தை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி இறக்க கூடாது. இனிவரும் காலங்களில் மேற்கண்ட பேருந்து நிறுத்தங்க ளில் பொதுமக்களை ஏற்றி இறக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து சிக்னலை கடைப்பிடித்து தேவையற்ற நெரிசலை குறைக்க ஒத்துழைக்க வேண்டு மென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை பகல் நேர ரயிலை வாரம் முழுவதும் இயக்க நடவடிக்கை மயிலாடுதுறை எம்.பி., ஆர்.சுதா தகவல்
மயிலாடுதுறை, பிப்.4- திருச்சி - சென்னை பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தரமாக இயக்க உத்தர விட்டுள்ள நிலையில், வாரம் முழுவதும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா தகவல் தெரிவித்துள்ளார். திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோ ணம், மயிலாடுதுறை வழியாக பகல் நேரத் தில் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என சுதா எம்.பி., ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி டம் கடந்த ஆண்டு நேரில் வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கையை ஏற்று, ஒன்றியரயில்வே அமைச்சர் சென்னை தாம்பரம் - திருச்சி இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உத்தர விட்டார். அதன்படி தற்போது இந்த ரயில் சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. திருச்சியில் இருந்து காலை 5.35-க்கு புறப்படும் இந்த ரயில், தஞ்சை (6.25 மணி), கும்பகோணம் (6.50 மணி), மயிலாடுதுறை (7.29 மணி) வழியாக சென்னை தாம்பரத்தை நண்பகல் 12.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30-க்கு புறப்பட்டு மயிலாடுதுறை (இரவு 7.50), கும்பகோணம் (8.20), தஞ்சை (9.15) வழியாக திருச்சியை இரவு 10.40-க்கு சென்றடைகிறது. கடந்த மாதம் மீண்டும் ரயில்வே அமைச் சரை சுதா எம்.பி நேரில் சந்தித்து, இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தரமாக இயக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று மேற்கண்ட எக்ஸ்பி ரஸ் ரயிலை நிரந்தரமாக இயக்க ஒன்றிய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கக் கூடிய இந்த ரயில் சேவையை அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ஆர்.சுதா எம்.பி., தகவல் தெரி வித்துள்ளார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சிக்கு மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பிப்.16 அரியலூர் மாவட்டத்தில் 6 மையங்களில் சிபிஎம் போராட்டம் அரியலூர், பிப்.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டக் குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய மக்கள் பணி கள் மற்றும் போராட்ட வடிவங்கள் குறித்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசி னார். தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய அரசு நூறுநாள் வேலை மீதான புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், அந்த திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும் அரிய லூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை உள்ளிட்ட ஆறு இடங்களில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை பிப்.16 ஆம் தேதி நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்க டாஜலம், துரை.அருணன், துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண் கல்லூரி மாணவிகளின் மண் மாதிரி சேகரிப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர், பிப்.4 - தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் கிராமங் களில் தங்கி களஆய்வு மற்றும் விழிப்புணர்வு பணி களை மேற்கொண்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக பூதலூர் விண்ணமங்கலம் அருகே மண்ணின் மாதிரிகளை சேகரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி அருள்ஜோதி வழிகாட்டுதலின் படி விளை நிலங்களில் மண்ணில் மாதிரிகளை சேகரித்த னர். அந்த மண் மாதிரிகளில் அமிலத்தன்மை, சத்து விவ ரங்களுக்கான சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் மண்ணில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச் சத்துக்களும், துத்தநாகம், இரும்பு போன்ற நுண்ணூட்டச் சத்துக்களும் எந்த அளவில் உள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம். மண்ணில் ஏற்கனவே உள்ள சத்துக்களைத் தெரிந்து கொள்வதன் மூலம், தேவையில்லாமல் அதிகப்படி யான உரங்கள் போடுவதைத் தவிர்க்கலாம். இது விவசாயி களுக்குத் தேவையற்ற செலவைக் குறைக்கும். பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் எந்தப் பயிருக்கு, எந்தச் சத்து அதிகம் தேவை என்பதை அறிந்து உரமிடுவதால், பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும் என தெரி வித்தனர். பிப்.10 மறியல்: திரளாக பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் முடிவு தஞ்சாவூர், பிப்.4 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ஒன்றியத் தலைவர் எம்.துரை ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் பங்கேற் றார். பிப்.10 அன்று நடக்கவுள்ள தொடர் மறியல் போராட் டத்தில் திருவோணம் ஒன்றியத்திலிருந்து ஊராட்சிக்கு 10 பேர் வீதம், 27 ஊராட்சிகளில் இருந்து 270 பேர் கலந்து கொள்வது, திருவோணம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி களிலும் சுமார் 1,500 உறுப்பினர் பதிவுகள் மேற்கொள்வது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவது என தீர்மானிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா நன்றி கூறினார். 15 ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை அறந்தாங்கி, பிப்.4 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் போக்கு வரத்து பணிமனை முன்பு சிஐடியு வாயிற்கூட்டம் போக்கு வரத்து கிளை சிஐடியு தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசுப் பேருந்துகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விபத்துகளை தவிர்ப்பதாக கூறி பேருந்து களின் வேகத்தை குறைத்து, ஓட்டுநரை மனஉளைச்ச லுக்கு ஆளாக்கி பழிவாங்கும் அரசு போக்குவரத்து கும்ப கோணம் கோட்டத்தை கண்டித்தும், அறந்தாங்கி கிளை யில் பேருந்துகளை சுத்தம் செய்யாமல் இயக்க வலி யுறுத்துவதை கண்டித்தும், 15 ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க கோரியும் வாயிற்கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவர் கார்த்தி கேயன், மண்டல பொருளாளர் தரணி முத்துக்குமார், மண்டல துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார், சாமியப்பா உள்ளிட்டோர் பேசினர்.
காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதை பரிசோதனைகள் பயிற்சி
திருவாரூர், பிப்.4 - திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்களுக்கு விதைப் பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் விதைப் பரிசோதனை நிலையம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் திருவாரூர் விஜயபுரம்-மில் தெருவில் செயல்பட்டு வருகிறது. விதைப் பரிசோதனை பணிகள் தொடர்பாக பயிற்சி பெறுவதற்கு பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ஆனந்தகுமார் ஒருங்கிணைப்பில் 4 ஆம் ஆண்டு (RAWE) மாணவர்கள் ரணதிவே, மோதீஸ்வரன், ஜீவா மற்றும் அஸ்வின் ஆகியோர் விதைப் பரிசோதனை தொழில்நுட்ப நடைமுறைகளை அறிந்து கொள்ள மையத்துக்கு வந்தனர். மாணவர்களுக்கு விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்படும் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் குறித்து விளக்கப்பட்டு, நிலையத்தில் ஸ்பெக்ஸ் (SPECS) இணையதளம் மூலம் விதை மாதிரிகள் பெறுவது. விதை மாதிரிகளில் மேற்கொள்ளப்படும் ஈரப்பத பரிசோதனை, புறத்தூய்மை ஆய்வு, பிற ரக கலவன் பரிசோதனை மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது டிஜிட்டல் முறையில் ஈரப்பதம் கணிக்கிடும் கருவி, விதை பதர் நீக்கும் கருவி, விதை புறத்தூய்மை கணக்கிட உதவும் பியூரிட்டி போர்டு மற்றும் நெல் உமி நீக்கும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் முளைப்புத் திறன் பரிசோதனை மேற்கொள்ளும் முறைகள், முளைப்பு ஊடகம், முளைப்புத் திறன் அறையில் கடைப்பிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வெளிச்சத்தின் அளவு குறித்தும் விளக்கப்பட்டது. விதை மரபணு வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 வகையான பயிர் ரகங்களின் கருவிதைகள் மற்றும் பாரம்பரிய ரகங்களின் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப்பயிற்சியை விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கா.புவனேஸ்வரி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
நலவாழ்வு உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி, பிப்.4- நலவாழ்வு உரிமை சட்டத்திற்கான கூட்ட மைப்பு சார்பில், நலவாழ்வு உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்க ளன்று திருச்சியில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு டி.என்.எஸ்.எப் மாநிலச் செயலாளர் மாணிக்கத்தாய் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சேதுபதி வரவேற்புரையாற்றினார். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலச் செயலாளர் செல்வராஜ், மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மக்கள் நலவாழ்விற்கான மருத்துவர் அரங்க மருத்துவர் சுரேஷ்பீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஜி.ஏ மாவட்டத் தலை வர் அருளீஸ்வரன் வாழ்த்துரை வழங்கி னார். மக்கள் நலவாழ்வு உரிமைக்கான சட்டம் குறித்து, மக்கள் நலவாழ்விற்கான மருத்துவ அரங்க மருத்துவர் கருணாகரன் அறிமுக உரையில் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு 30 ஆண்டுகளுக்கு முன் கூறிய சில சர்வீஸ் தான் இன்றளவும் சுகாதார மையங் களில் வழங்கப்படுகிறது. தாலுகா, மாவட்ட மருத்துவமனைகளில் சுத்தம், சுகாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. இந்த நிலை மாறவும், உரிய சிகிச்சை மற்றும் உள்கட்ட மைபிற்கு நலவாழ்வு உரிமை சட்டம் வேண்டும்’’ என்றார். தேவையும், நம் பார்வையும் அதன் இன்றியமையாமையும் குறித்து மருத்துவர் சுந்தர்ராமன் பேசுகையில், “பொது சுகாதார சட்டம் மிகவும் முக்கியமானது. இன்று அதை முழுமையாக செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவ சேவைகள் நமக்கு உரிமைகளாக கிடைக்க வேண்டும். முதலாளித்துவம் மருத்துவத்தையும் விற் பனை செய்ய சொல்கிறது. மருத்துவம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண் டும். நலவாழ்வு உரிமைச் சட்டம் வந்தால் சுகாதார சேவைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழும். சிகிச்சைக்கு காலக் கெடு கட்டாயமாகும். மருத்துவர், செவிலி யர் பற்றாக்குறை ஒழியும். மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும். சிகிச்சை மறுப்பு குற்ற மாக கருதப்படும்’’ என்றார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
தீக்கதிர் செய்தி எதிரொலி மாணவர் சங்கப் போராட்டத்தால் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நிறுத்தம்
கும்பகோணம், பிப்.4- இந்திய மாணவர் சங்கம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் பாரம்பரியமான விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வரு கின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரிய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில், தமிழக அர சின் விளையாட்டு துறை ஆணையின்படி, சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலியில் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு வேலை துவங்கியது. ஆனால் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதா னத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதால் அருகே உள்ள வரலாறு, வணிகவியல், இயற்பியல் ஆகிய மூன்று துறைகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப் படும் நிலை ஏற்படும். இதனால் மாண வர்கள் கல்விப் பயிலும் இடவசதியை இழக்க நேரிடும். எனவே விளையாட்டு அரங்கத்தை மாற்றம் செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பாக கல்லூரி வாயில் முன்பு, “கல்லூரி மைதானம் கல்லூரி மாணவர் களுக்கே” என்ற முழக்கத்துடன் கும்பகோ ணம் கல்லூரி இந்திய மாணவர் சங்க கிளை சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. இதையொட்டி கல்லூரி நிர்வாகம் போ ராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத ஒப்பந்ததாரர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்லூரி உள் விளையாட்டரங்கம் அமையும் என்று பேசி சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மாணவர் சங்கத்தினர், “தற்காலிக பேச்சுவார்த்தை உடன்படாததால் கல்லூரி மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே வேண்டும்; வெளி ஆட்களை அனுமதிக்க கூடாது; மேலும் உள்விளையாட்டரங்கம் வருமானத்திற்காக போகும் வாய்ப்பும், வெளியில் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் கல்லூரி நாட்களில் ஒலிபெருக்கி அமைத்து பயன்படுத்துவார்கள். இது மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே கல்லூரி வளாகத்தில் இடையூறு இல்லாத இடத்தில் உள்விளையாட்ட அரங்கம் அமைத்து, கல்லூரி மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இதையடுத்து, உள் விளையாட்டு அரங்கம் கட்டுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. மாணவர் சங்கத்தினரை போராட் டத்தால், முதல் கட்டமாக அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.