tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம்

பாஜக தலைமையிலான ஆட்சியில் மம்தா பானர்ஜி ஒன்றிய அமைச்சராக இருந்தபோதுதான், குடியுரிமை  பிரச்சனைகளுக்கான தொடக்கப்புள்ளி உருவானது. 2003இல் குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், ஒரு நபர் இந்தியாவில் பிறந்தார் என்பதற்காக அவருக்குக் கிடைக்கும் குடியுரிமையை விட, அவருடைய முன்னோர்கள் யார் (வம்சாவழி) என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

வாக்குரிமையை நிரூபிக்க நாட்டின் முன்னாள் கடற்படைத் தளபதிக்கே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் எவ்வ ளவு திறமையற்றதாகவும், கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

பத்திரிகையாளர் பியூஸ் ராய்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில், காவல் நிலையத்திற் குள்ளேயே ஒரு பெண் அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்ததே போலீசார் தான் என்று கூறப்படுகிறது. இது எந்த வகை கொலை?

திரிணாமுல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி

ஜனநாயகம் தண்டிக்கப்படுகிறது. விசாரணை அமைப்புகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. தேர்தல்கள் முறைகேடு செய்யப் படுகின்றன. போராடுபவர்கள்  சிறையில் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமையாளர் களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இதுதான் பாஜகவின் புதிய இந்தியாவா?