tamilnadu

img

புதுக்கோட்டையில் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம்

புதுக்கோட்டையில் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி புதுக்கோட்டையில் சிறப்பு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “இந்தியாவுக்குத் தேவை இடது மாடலே” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி உரையாற்றினார். இக்கருத்தரங்கில் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தலைப்பில் கவிஞர் ஜீவி ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் வரவேற்புரையாற்ற, மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், ஏ. ராமையன், கே. சண்முகம், சு. மதியழகன், த. அன்பழகன், துரை நாராயணன், எஸ். ஜனார்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி உள்ளிட்ட ஏராளமானோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

“செம்மொழி இருக்க மும்மொழி திணிப்பா?”

தஞ்சாவூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தமுஎகச மாநில துணைத்தலைவர் ந.முத்துநிலவன் “செம்மொழி இருக்க மும்மொழி திணிப்பா” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.  “தமிழகத்தில் இந்தியை நாம் எதிர்க்கவில்லை, ஆனால் திணிப்பை எதிர்க்கிறோம். நமது பாரம்பரியம் வெற்றுப் பெருமை அல்ல. தமிழின் உண்மையான பெருமை நம்மில்  பெரும்பாலானோருக்கு தெரிய வில்லை. தொன்மையான மொழிகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. சிதைந்து விட்டன. சமஸ்கிருதம் பேச்சு  வழக்கில் இல்லை. ஆனால், செம்மொழி தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பேச்சாக, எழுத்தாக, மூச்சாக புழக்கத்தில் உள்ளது,” என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார்.  “தமிழ் மொழி கண் போல, மற்ற மொழிகள் கையில் உள்ள டார்ச் விளக்கு போல, கண் இருந்தால் தான் டார்ச் பயன்படும். இதுதான் தாய் மொழியின் அவசியம். தமிழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் அறிவியலின் சாட்சியாக உள்ளது,” என்று தமிழர் நாகரிகத்தின் சிறப்பை விவரித்தார்.  “தாய்மொழியில் பயின்று, உயர்கல்வி அறிவுக்கு தொடர்பு மொழி யாக ஆங்கிலம் படித்த, சிங்கப்பூர் உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. மகாத்மா காந்தி தன் சுயசரிதை யை தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார். சென்னை வந்த காந்திக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைத்த போது, ‘எனது தாய் மொழி குஜராத்தி, உங்கள் தாய்மொழி தமிழ், பிறகு இதற்காக ஆங்கிலத்தில் வரவேற்பு’ என்றார். இன்று குஜராத்தில் பிறந்த மோடியும், அமித்ஷாவும் இந்தி யை தூக்கிப் பிடித்து திரிவது எதற்காக..?” என்று கேள்வி எழுப்பினார்.  “ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே  நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவன் இதுதான் அவர்களின் திட்டம். தமிழ கத்தில் அவர்கள் பருப்பு வேகாது. மருத்து வம், பொறியியலில் தலைசிறந்த கல்லூ ரிகள் தமிழகத்தில் தான் உள்ளது. தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பில் முத லிடத்தில் உள்ளது,” என்று தமிழகத்தின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டினார்.  “இந்தி திணிப்பை நாம் அலட்சிய மாக விட்டு விடக்கூடாது. இன்று பத்து வயதுக்கு கீழான குழந்தைகள் பெயர் தமிழில் இல்லை. நமது செல்போனில் உள்ள காண்டாக்ட் பெயர் கூட ஆங்கி லத்தில் தான் உள்ளது. தமிழை வளர்ப்ப தல்ல நமது நோக்கம், அதை முதலில் அழியாமல் பாதுகாப்பது தான் முக்கி யம்,” என்று தோழர் முத்துநிலவன் வலி யுறுத்தினார்.