கீழ்வேளூர் வட்டார ஊராட்சி அலுவலரை
கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கீழ்வேளூர் வட்டார ஊராட்சி அலுவலரை (கி.ஊ) கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமை வகித்தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து கண்டன உரை யாற்றினார். பிஎம்ஏஜிஒய் மற்றும் கலைஞர் கனவு இல்லத்தின் பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இறுதி பில் தொகை வழங்கவில்லை. இதை கண்டித்தும், அரசு வீடுகளுக்கு வழங்கப் படுகிற கம்பிகளை எடை குறைவாக வழங்கு வதை கண்டித்தும், கிராம ஊராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வராததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ் உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி, முடிகண்டநல்லூர், மன்னம்பந்தல் ஆகிய கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முடிகண்டநல்லூர் கிராமத்தில் வட்டார மரக்கன்று நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.