புதுதில்லி, டிச. 28 - போராடும் விவசாயிகள் அமைப்பு களுடன் ஒன்றிய பாஜக அரசானது, உட னடியாக பேச்சு நடத்தி, கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “நவம்பர் 26 முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மூத்த விவசாயிகளின் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கு வதுடன், விவசாயக் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும் என்ற விவசாயி கள் இயக்கத்தின் நியாயமான கோரிக்கைக்காகவே இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஒன்றிய அரசுடன் தொடர்புடையவை. ஆனால், இதில் தலையிட மறுப்பதன் மூலம் ஒன்றிய அரசு தான், விவசாயிகளின் போராட்ட நிலை மைக்கு முழு பொறுப்பாகும். நாடு முழு வதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பரவலான கவலையும் அமைதி யின்மையும் நிலவுகிறது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண அனைத்து விவசாயிகள் அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அவற்றின் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு உடனடியாகப் பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தும் நோக்கில் நவம்பர் 26 அன்று கனவுரி எல்லையில் ஜக்ஜித் சிங் தல்லேவால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது தல்லேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறும், தல்லேவாலை டிசம்பர் 31-க்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.