tamilnadu

img

ஜம்பை பேரூராட்சியில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

ஜம்பை பேரூராட்சியில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, டிச.15- ஜம்பை பேரூ ராட்சியில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச் சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாய்க்கால்பாளையத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பவானி அருகே ஜம்பை பேரூராட்சிக்குட்பட்டது வாய்க்கால்பாளையம், பெரியார் நகர். இக்குடியிருப்பில் உள்ள வீதிகளில் கான்கிரீட் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வீதியின் நடுவில் வழியை மறுக்கும் வகையில் மின் கம்பம் உள்ளது. கழிவு நீர் வெளியேற சாக்கடை இருந்தும் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அதேபோல திறந்த வெளி கிணற்றிற்கு மூடி இன்றி அபாய நிலையில் உள்ளது. எனவே, வழி மறிக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். நிறுத்தி வைத்துள்ள கான்கிரீட் வீதி பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாக்கடை வெளியேற வடிகால் அமைக்க வேண்டும். திறந்தவெளி கிணற்றிற்கு மூடி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் எம்.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், தாலுக்கா செயலாளர் ஆர்.பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு செயலாளர் ஏ.ஜெகநாதன், வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பி.கோபாலகண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.