tamilnadu

தஞ்சாவூரில் இன்று தியாகி என்.வெங்கடாசலம் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பங்கேற்கிறார்

தஞ்சாவூரில் இன்று தியாகி என்.வெங்கடாசலம் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பங்கேற்கிறார்

தஞ்சாவூர், ஜூலை 24-  உழைக்கும் மக்களின் ஒப்பற்றத் தலை வர் தியாகி என்.வெங்கடாசலம் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம், ஜூலை 25 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணியளவில், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டி தர் சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது.  மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன்  வரவேற்கிறார். மாலை 4 மணியளவில் செந்தொண்டர், குழந்தைகள் அணி வகுப்புடன் தொடங்கும் இக்கூட்டத்தில், அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.  முன்னதாக, வெள்ளியன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூத லூர் தெற்கு ஒன்றியம் சார்பில், தியாகி  என்.வெங்கடாசலம் நூற்றாண்டு நினைவு  சிலை மற்றும் தியாகி என்.வி நினைவகம் அலுவலக திறப்பு விழா பூதலூர் அய்யனா புரம் சாலையில் நடைபெறுகிறது.