tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.கே.ஷைலஜா

திமுகவும் நாங்களும் இரு வேறு கட்சிகள் என்றாலும் ஒரே மாதிரியான விஷயங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்பாடுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாடு போல  கேரளத்திலும் மகளிர் உதவித்தொகை திட்டத்தை அனைத்து வர்க்கத்தினருக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது எங்களின் வருவாய் குறைவு. அதைச் சரிப்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி

2017ஆம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக கூட்டணியில் இணைந்ததற்கு பிறகு இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டை விமர்சித்து வருகிறார். நவீன தொழில்நுட்பம் நம்மை மொழிகளைக் கடந்து திரைப்படங்களை பார்க்க வைக்கிறது என்பதை பவன் கல்யாண் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

கும்பமேளாவில் படகோட்டிய பிண்ட்டு குடும்பம் மிகுந்த குற்றப்பின்னணி கொண்டது. அதனால் எப்படி திடீரென 45 நாட்களில் 130க்கும் மேற்பட்ட படகுகளை வாங்கி ரூ.30 கோடி வருவாய் ஈட்டினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்

உங்கள் இந்தி மொழியை “எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று சொல்வது மொழியை வெறுப்பது அல்ல. அது எங்கள் தாய்மொழியை சுயமரியாதையுடன் பாதுகாப்பது என்று பவன் கல்யாணுக்கு யாராவது சொல்லுங்கள்.