tamilnadu

img

தோழமைக் கட்சித் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள்

தோழமைக் கட்சித் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டப்பேர வைத் தேர்தலை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்கிறது. பழனி, கந்தர்வக் கோட்டை (தனி), பத்மநாப புரம், திருவொற்றியூர், கீழ்வேளூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது வேட்பாளர் பட்டியலை திங்களன்று (மார்ச் 30) வெளியிட்டது. இதன்படி பழனி தொகுதி யில் மாநில செயற்குழு உறுப் பினர் என். பாண்டி, கந்தர் வக்கோட்டையில் மாநிலக்  குழு உறுப்பினர் எம். சின்ன துரை, பத்மநாபபுரத்தில், மாநிலக்குழு உறுப்பினரும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான ஆர்.செல்லசுவாமி, திருவொற்றி யூரில் மாநிலக்குழு உறுப்பி னர் எல். சுந்தரராஜன், கீழ்வே ளூரில் டி. லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள், செவ்வாய்க் கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டா லின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கரு ணாநிதி எம்.பி., இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன், மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த், விசிக  தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. ஆகிய கூட்டணி கட்சித் தலைவர் களைச் சந்தித்து வாழ்த்து களைப் பெற்றனர்.  சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தோ. வில்சன் ஆகியோர் உட னிருந்தனர்.