tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்கள் பிரம்மாண்ட பேரணியுடன் வேட்புமனுத் தாக்கல்

ஆயிரக்கணக்கான கொடிகள் அணிவகுப்புடன் பேரணி தஹானு சிபிஎம் வேட்பாளர்  வினோத் நிகோல் வேட்புமனுத் தாக்கல்

பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு (பழங் குடி) சட்டமன்ற தொகு தியின் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவான வினோத் நிகோலை வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநி லக்குழு அறிவித்தது. அதன்படி வினோத் நிகோல் திங்கள்கிழமை (அக்., 28) எம்விஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சாகர் நாகாவிலிருந்து எஸ்டிஓ அலுவலகத்திற்கு ஒரு மணி நேர பிரம்மாண்ட பேரணியாக சென்று  வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்த பேரணியில் எம்விஏ கூட்ட ணிக் கட்சிகளின் ஆயிரக்கணக் கான கொடிகள் பேரணி சென்ற இடங்களில் மாபெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  டாக்டர் அசோக் தாவ்லே தலைமையில் நடை பெற்ற இந்த பேரணியில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லே மற்றும் கிசான் குஜார், கிரண் கஹாலா, ரட்கா கலங்டா, லக்ஷ்மன் டோம்ப்ரே, லஹானி தௌடா, சுனிதா ஷிங்டா உள்ளிட்ட மாவட்ட மற்றும் மாநில அளவி லான சிபிஎம் தலைவர்கள், சிவ சேனா (உத்தவ்) கட்சியின் தலை வர்களான அஜய் தாக்கூர், சஞ்சய் காம்ப்ளே, சஞ்சய் பாட்டீல், உஜ்வா லா தம்ஷே, தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர்கள் மிஹிர் ஷா, வருண் பரேக், தன்மய் பாரி, காஷி நாத் சவுதாரி, காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தோஷ் மோர், ஹபிசு கான், சுதாகர் ராவத், உழைப்பாளர் சங்க தலைவர்கள் பிரையன் லோபோ மற்றும் மது தோடி மற்றும் பாரத் ஜோடோ அபியான் தலைவர் கள் ராஜு பிசே, ரமாகாந்த் பாட்டீல் உள்ளிட்டோர் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்றனர்.

12,000க்கும் மேற்பட்டோர் பேரணி சோலாப்பூர் நகர மத்தியத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஆதம் நரசய்யா  வேட்புமனுத் தாக்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட் டத்தில் உள்ள சோலாப் பூர் நகர மத்தியத் தொகுதியின் எம்விஏ கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆதம் நரசய்யா அறிவிக்கப் பட்டுள்ளார்.  அதன்படி திங்களன்று சோ லாப்பூர் ஆட்சியர் அலுவலகத்தி ற்கு எம்விஏ கட்சிகளின் தலை வர்கள், ஊழியர்கள், அனைத்து வகை தொழிலாளர்கள், பொது மக்கள் என 12,000க்கும் மேற் பட்டோர் பேரணியாகச் சென்று சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான (சோலாப்பூர் நகர மத்திய தொகுதி) ஆதம் நரசய்யா வேட்புமனுத்தாக்கல் செய்தார். சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக பீடி, விசைத்தறி, கட்டுமானம், போக்குவரத்து, அங்கன்வாடி, ஆஷா (சுகாதார ஊழியர்கள்) மற்றும் பிற துறைகளில் பணி யாற்றும் ஆண்களும், பெண்க ளும் ஆர்வத்துடன் வேட்புமனுத் தாக்கல் பேரணியில் பங்கேற்ற னர். சிபிஎம் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளரும், மத்தியக்குழு உறுப் ்பினருமான டாக்டர் உதய் நார்கர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.எச்.ஷேக், மாநிலக் குழு உறுப்பினர்கள் நசீமா ஷேக், நளினி கல்புர்கி, யூசுப் மேஜர் மற்றும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட எம்விஏ கூட்டணிக் கட்சி தலைவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து நடைபெற்ற பொ துக்கூட்டத்தில் ஆதம் நரசய்யா உரையாற்றினார். இந்த பொ துக்கூட்டத்தில் சிபிஎம் ஊழி யர்கள், பொதுமக்கள் என ஆயி ரக்கணக்கனோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.