சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி மன்னார்குடியில் ரூ. 6 லட்சம் அளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய 24-ஆவது மாநாட்டு நிதியாக மன்னார்குடி நகரம் - ஒன்றியம், கோட்டூர், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய ஐந்து ஒன்றியக்குழுக்கள் சார்பில், ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.பி. ஜோதிபாசு மற்றும் ஒன்றிய - நகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.