சிபிஎம் அகில இந்திய 24ஆவது மாநாட்டுப் பிரச்சாரம் துவங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் - கட்சியின் அகில இந்திய - மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு கள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் பிரச்சார இயக்க மானது, மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தில் (14.03.2025) துவங்கியது. சென்னையில் கட்சி யின் மாநிலக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் செங் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டுப் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்து உரை யாற்றினார். நிகழ்ச்சிக்கு மாநி லக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி தலைமை தாங்கி னார். மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மூத்த பத்திரிகையாளர் என். ராம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன், இரா. சிந்தன், கே.சி. கோபிகுமார், தோ. வில்சன் மற்றும் அலுவலகம் - ஊடக கிளையினர் பங்கேற்றனர். இதேபோல மாநாட்டு பிரச்சாரத்தை கொண்டு செல்லும் வகையில், வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் கட்சி கிளைகள் தோறும் செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சி கள் நடைபெற்றன.