பினராயி விஜயன் மகள் மீதான ஊழல் புகார் நீதிமன்றத்தில் தள்ளுபடி
கேரள முதல்வர் பினராயி விஜய னின் மகள் வீணாவின் நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் மீது விஜிலென்ஸ் விசாரணை கோரிய மனு வை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. கேரள முதல்வர் பினராயி விஜய னின் மகள் வீணா. பொறியாளரான இவர் பெங்களுரில், ‘எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கும் சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கும் இடையே சேவைகள் தொடர்பான ஒப் பந்தம் இருந்ததாகவும், அவற்றுக்கு இடையிலான வணிக நடவடிக்கையில் முதல்வர் பினராயி விஜயனை தொடர்புப்படுத்தியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் விவாதத்தை எதிர்க்கட்சிகள் நடத்தி வந்தன. இதற்கு ஆதாரமாக சிஎம்ஆர்எல் பிரதிநிதி யிடமிருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஒரு டைரிக்குறிப்பை பயன்படுத்தினர். இதை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாத்யூ குழல்நாடன், திருவனந்தபுரம் லஞ்ச தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேத்யூ குழல் நாடன் எம்எல்ஏ-வும், கிரிஷ் பாபு என்பவரும் கேரள உயர்நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில், கேரள உயர் நீதி மன்ற நீதிபதி கே. பாபு, வெள்ளியன்று (மார்ச் 28) மொத்தம் 59 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில், “பினராயி விஜயன் மீது வெறும் சந்தேகத்தின் அடிப்படையி லேயே புகார் வைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த உண்மையோ ஆதாரமோ இல்லை” என்று நீதிபதி கூறியுள்ளார்.
“அவ்வாறு சந்தேகத்தின் அடிப்ப டையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு, லஞ்ச தடுப்பு துறை விசாரணை நடத்தப்பட்டால், அது அரசு ஊழி யர்களின் அலுவலகப் பணிகளுக்குக் களங்கம் விளைவிப்பதாகவே இருக்கும்; இதுபோன்ற புகார்களில் பிரதிவாதியாக ஒருவர் நீதிமன்றத் திற்கு அழைக்கப்படுவது தனிநபரின் கண்ணியம், சுயமரியாதை மற்றும் பிம்பத்தை மோசமாக பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார். “’டைரியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழக்குத் தொடர முடியாது’ என்று லஞ்சத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் எந்தத் தவறும் இல்லை” என்றும் கூறியிருக்கும் நீதி பதி கே. பாபு, மேத்யூ குழல்நாடனின் மேல்முறையீட்டு மனுவையும் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளார். தீர்ப்பு குறித்து, சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறுகையில், “சிலர் முத லமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தி னருக்கு எதிராக ஒரு புகைத்திரையை உருவாக்கிக் கொண்டிருந்தனர்; ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம், யுடிஎப் - பாஜக தலைமையிலான வான வில் கூட்டணியின் மற்றொரு குற்றச்சாட்டும் தகர்த்தெறியப்பட்டுள் ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்த தீர்ப்பு, பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊடகங்களுக்கும் கிடைத்த ஒரு அடியாகும்” என்று குறிப்பிட்டுள் ளார்.