tamilnadu

img

இராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்த பயணிகள் 9 பேருக்கு கொரோனா....

இராமேஸ்வரம்:
வாரணாசியில் இருந்து ரயில் மூலம் இராமேஸ்வரம் வந்த 9 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு வாரணாசியில் இருந்து வந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் ரயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், பீகாரைச் சேர்ந்த 7 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, 9 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.