tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

சென்னை: அமெரிக்கா-இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்களால் சமையல் எரிவாயு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், உணவு விடுதிகள் மற்றும் தேனீர் கடைகள் மூடப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார். எரிவாயு உருளைகளை பதுக்கி,  அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

தமாகா-ஐஜேகே கூட்டணி  வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதி முக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு (தமாகா) ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.  அதன்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகரும், ஈரோடு மேற்கு தொகுதியில் எம்.யுவராஜாவும்,  கிள்ளியூர் தொகுதியில் ஜெ.நிவின் சைமனும், கும்பகோ ணம் தொகுதியில் எம்.கே.ஆர்.அசோக்குமாரும், ராணிப் பேட்டை தொகுதியில் வி.எம்.கார்த்திகேயனும் தாமரை  சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி நிறுவனர் பாரி வேந்தர் அறிவித்தார். அதன்படி வெங்கடேசன் பல்லா வரம் தொகுதியிலும், சரண்யா அன்பழகன் குன்னம்  தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஏ.சி.சண்முகத்தின்  புதிய தமிழகம் கட்சிக்கு அதிமுக மதுரை மத்திய தொகுதி யையும், பாஜக ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. இரு தொகுதி இரு சின்னம்! அதிமுக-பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியை அதிமுக  ஒதுக்கி உள்ளது. தொகுதியில் அந்த கட்சி இரட்டை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில், பாஜக வும் ஏ.சி. சண்முகத்தின் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது. அந்த தொகுதியில் தாமரை சின்னத் தில் போட்டியிடுவோம் என்று புதிய நீதி கட்சி அறி வித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி  கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய  தமிழகம் கட்சி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள தாக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.  அதிமுக-பாஜக கூட்டணியில் தனக்கு 15 தொகுதி களும் ஒரு ராஜ்யசபா இடமும் வேண்டும் என்ற கோரிக் கையை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. நம்மை புறக் கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதே உண்மையான அரசியல் வெற்றி என்று கிருஷ்ணசாமி தனது அறிக் கையில் தெரிவித்துள்ளார். கட்சி வலுவாக உள்ள 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புரட்சி பாரதம் தனித்துப் போட்டி!

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு கடந்த முறை ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம்  தொகுதியில் அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2026 தேர்தலுக்கு 4 தொகுதிகளைக் கேட்டு போராடி வந்தார்.  ஆனால் மீண்டும் 1 தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கூடுதல் தொகுதி கொடுக்க  வேண்டும் இல்லையென்றால் தனித்து போட்டியிடு வோம் என்று அந்தக் கட்சியின் செயலாளர் ருசேந்திர  குமார் தெரிவித்துள்ளார்.

வணிக நுகர்வோருக்கு பிஎன்ஜி இணைப்பு

 சென்னை: வணிக மற்றும் தொழில்துறை எல்பிஜி  நுகர்வோர் பிஎன்ஜி கேஸ் இணைப்பு பெற மாவட்டம்  வாரியான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், நாகையில் டோரன்ட் கேஸ்  இணைப்பிற்கு 1800-2125-6789 என்ற இலவச எண்ணி லும், பிற மாவட்டங்களுக்கு ஒவ்வொரு நிறுவனத்தின்  தொடர்பு எண்களிலும் அழைக்கலாம். விரிவான விவ ரங்களுக்கு மாவட்ட வாரியான எண்களை அரசு அறி விப்பில் காணலாம்.

விஐடி அசத்தல்

வேலூர்: உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறு வனமான QS குவாக்க ரெல்லி சைமண்ட்ஸ் 2026-க்கான பாட பிரிவு தர வரிசை யில் இந்திய அளவில் 6 ஆவது  இடத்திற்கு விஐடி பல்கலைக் கழகம் முன்னேறியுள்ளது.

பரப்புரைக்கு அனுமதி மறுக்கவில்லை தேர்தல்

அதிகாரி விளக்கம் சென்னை: சென்னை யில் விஜய் பரப்பு ரைக்கு அனுமதி மறுக்கப் படவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி  குமரகுருபரன் தெளிவு படுத்தியுள்ளார்.  நிபந்தனைகளுக்கு உட்பட்டு சரியான ஆவ ணங்களுடன் விண்ணப் பம் வழங்கினால் மட்டுமே அனுமதி வழங்க  முடியும் என்றும், கூட்டத் திற்கு ஒருநாள் முன்பு அனுமதி கோரினால் தர இயலாது என்றும் அவர் கூறினார். அனைத்து அரசியல் கட்சிகளும் 48  மணி நேரத்திற்கு முன்பாக  ஆன்லைன் மூலமே விண் ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.