தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம் படத்திறப்பு நிகழ்வு புதனன்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது. முன்னணியின் மாநிலக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், முன்னணியின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேத்திரன், தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா, துணை பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.