tamilnadu

img

தோழர் எஸ்.ஜெய்கிஷ் படத்திறப்பு

தோழர் எஸ்.ஜெய்கிஷ் படத்திறப்பு

திருவாரூர், பிப்.13 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளரு மான எம்.சேகரின் மகன் கொரடாச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.ஜெய் கிஷ் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந் தார்.  அவரது படத்திறப்பு அம்மையப்பன் பகுதியில்  வெள்ளியன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.முருகையன் தலை மையில் நடைபெற்ற படத் திறப்பில், மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் அஞ்சலி உரையாற்றி னார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச்  செயலாளர் சாமி.நடராஜன்,  மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ் அஞ்சலி செலுத்தி னர். மறைந்த தோழர் ஜெய்கிஷ் உருவப்படத்தை கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.  அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி, தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கேசவராஜ் உள்ளிட்ட முக்கிய  தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.