tamilnadu

img

தோழர் நா.சத்தியசீலன் படத்திறப்பு

தோழர் நா.சத்தியசீலன் படத்திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கீரங்குடி கிராமத்தைச் சேர்ந்த தோழர் நா.சத்தியசீலன் மார்ச் 3 ஆம் தேதி  காலமானார். இந்நிலையில், உருவப் படத்தை சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து திறந்து வைத்தார். தமுஎகச, அறிவியல் இயக்கம், தமிழ்நாடு  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாற்று ஊடக மையம் உள்ளிட்டவற்றில் தோழர் சத்தியசீலன் பல பொறுப்புகளிலிருந்து திறம்பட பணியாற்றியவர். சமூக செயல் பாட்டாளராகவும் இருந்து களப்பணியாற்றி யவர். அவரது மறைவையொட்டி “யானை யின் வழித்தடம்” என்ற சத்தியசீலனின் நினை வலைகளை கொண்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. புத்தகத்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்தராஜன் வெளியிட, அவர் பணியாற்றிய சங்கங்களின் பிரதிநிதி கள் மற்றும் அவரது இணையர் சங்கீதா, இரு மகன்கள் பெற்றுக் கொண்டனர். தமுஎகச நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆதி. உதயகுமார், அறி வியல் இயக்க மாவட்டச் செயலாளர் தா.பால இரணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ், அறிவியல் இயக்க மாநிலச் செய லாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், தமிழ்நாடு  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எம். செந்தில்குமார் மற்றும் கு.வ.மனைத்துணை நாதன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.