tamilnadu

img

சென்னையில் நாளை பிரம்மாண்டமாக எழுகிறார் தோழர் மார்க்ஸ்

சென்னையில்   நாளை பிரம்மாண்டமாக  எழுகிறார் தோழர் மார்க்ஸ் 

முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப். 4 - சுரண்டலற்ற புதிய  உலகத்தைப் படைப்ப தற்கான தத்துவத்தை வடித்துத் தந்தவர், உலக மாமேதை காரல் மார்க்ஸ். வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக, மனித சமூகம் மாண்புடன் வாழ்வதற்குத் தடையாக இருக்கும், ஏழை - பணக் காரன், முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை, மேலோர் - கீழோர், ஆண் - பெண்  என சமூகத்தின் அனைத்து விதமான பாகுபாடு களையும் உடைத்தெறியக் கூடிய, ‘கம்யூனிசம்’ என்ற சமூக விடுதலைக்கான சூத்திரத்தை பாட்டாளிகளின் கையில் ஆக்கியளித்தவர்.   அந்த மாமேதையின் முழு உருவச் சிலை, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தின் அருங்காட்சியக வளாகத்தில் பேருருவமாய் எழுப்பப்பட்டு உள்ளது. அதனை, தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறத் தக்கதாக, வெள்ளிக் கிழமையன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.