வாலிபர் சங்கத்திற்கு ஆட்சியர் பாராட்டு
தருமபுரி, அக்.18- தொடர்ச்சியாக ரத்ததான முகாம் நடத்தி வரும் வாலிபர் சங்கத்திற்கு தருமபுரி ஆட்சி யர் பாராட்டு தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தரும புரி மாவட்டக்குழு சார்பில், ஆண்டுதோறும் தோழர் தேவபேரின்பன் நினைவு தினம் மற் றும் பகத்சிங் நினைவு தினத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சேக ரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டு வரு கிறது. மேலும், அவ்வபோது அவசர தேவைக்கு உடனடியாக சென்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினரை ரத்ததானம் செய்து வருகின்றனர். இச்சேவையை பாராட் டும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் வாலி பர் சங்கத்தினருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட உதவி பொறுப்பாளர் தி.வ.தனு ஷன், பாப்பாரப்பட்டி பகுதிக்குழு உறுப்பி னர் ரஜினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.