tamilnadu

img

வரலாற்று போராட்டத்தை நிறைவு செய்த போக்குவரத்து ஊழியர்கள்!

வரலாற்று போராட்டத்தை நிறைவு செய்த போக்குவரத்து ஊழியர்கள்!

கோவை, அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர்கள், சட்டப்பேர வையில் வலியுறுத்திய நிலையில்,  அமைச்சர் சிவசங்கர் தலைமையில்  துறை செயலர் உள்ளிட்ட போக்குவ ரத்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சு  வார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியர்க ளுக்கான மருத்துவ காப்பீட்டை  உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு  போக்குவரத்து ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர்.  அரசு அலட்சியப்படுத்திய நிலையில், கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை தலைமைச் செய லகத்தை முற்றுகையிட திரண்ட னர். இதனையடுத்து, மறியல், கைது உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெற்றது. இந்நிலையில், 60 நாட்க ளுக்கு மேலாக தொடர்ந்து போக்கு வரத்து ஊழியர்கள் தொடர் காத்தி ருப்புப் போராட்டம் பற்றி, சட்டப் பேரவை கூட்டத்தொடரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப் பினர்கள் போக்குவரத்து ஊழியர் கள் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பினர். இதன் விளைவாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தலைமையில் போக் குவரத்து துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து  கடந்த 62 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர் கள் மற்றும் ஓய்வூதியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் நிறைவடைந்தது. கோவை சுங்கம்  பணிமனை முன்பு போராடி வந்த  தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பேச்சுவார்த்தை முடிவை வர வேற்று போராட்டத்தை நிறைவு செய்தனர். இதில் அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சங்கம் (சிஐ டியு) சம்மேளன துணை பொதுச்  செயலாளர் எம்.கனகராஜ், மாவட் டச் செயலாளர் எம்.வேளாங் கண்ணி ராஜ், மாவட்டத் தலைவர் ஆர். லட்சுமி நாராயணன், சம்மே ளன துணை பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.அருணகிரிநாதன், சுரேந்திரன், முத்துச்சாமி உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.   ஈரோடு இதேபோன்று, ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற 62 ஆம் நாள் போராட்டத் திற்கு போக்குவரத்து சங்க மண்ட லத் தலைவர் எஸ்.இளங்கோ மற் றும் ஓய்வூதியர் அமைப்பின் தலை வர் பி.ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் போக் குவரத்து சங்க பன்முக தலைவர் என்.முருகையா, மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, பொருளாளர் சி.அய்யாசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன் வாழ்த்திப் பேசினார். அப் போது, பேச்சுவார்த்தையில் ஏற் பட்ட உடன்பாட்டால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறி விக்கப்பட்டது. தொடர்ந்து புத னன்று (அக்.22) வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறும் என வும் தெரிவிக்கப்பட்டது. சேலம் சேலம் புதிய பேருந்து நிலை யம் மையனூர் போக்குவரத்து பணி மனை முன்பு நடைபெற்ற போராட் டம் நிறைவடைந்தது. அரசு போக்கு வரத்து சங்க மண்டலத் தலைவர் செம்பன், பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை பொதுச்செயலாளர் முரு கேசன், இதில், சாலை போக்குவ ரத்து சம்மேளன துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்டச்  செயலாளர் முருகேசன், ஓய்வு பெற்ற ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வன், ஓய்வு பெற்ற அரசு  விரைவு போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகிகள் மணி முடி, பரம சிவம் ஆகியோர் நிறைவுரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்த னர்.