டெஸ்க்டாப் மெசஞ்சர் செயலி விரைவில் நிறுத்தம்!
விண்டோஸ், மேக் ஆகிய இயங்குதளங்களு க்கான டெஸ்க்டாப் மெசஞ்சர் (Desktop Messenger) செயலி வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நிறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தேதிக்கு பிறகு, இந்த டெஸ்க்டாப் செயலிகள் வழியாக Login செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, பயனர்கள் மெசஞ்சரை Facebook.com இணையதளத்தின் வழியாகவும், ஃபேஸ்புக் டெஸ்க்டாப் செயலி மூலமாகவும் பயன்படுத்தலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெஸ்க்டாப் மெசஞ்சர் நிறுத்தம் தொடர்பாக in-app notification மூலம் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும் என்றும், அதன்பின் மெசஞ்சரை 60 நாட்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதற்கு பிறகு, டெஸ்க்டாப்பில் இந்த செயலியை பயன்படுத்த முடியாது. இதை தொடர்ந்து, பயனர்கள் தங்கள் மெசஞ்சர் சாட்களை சேமித்துகொள்ள PIN-ஐ செட் செய்து, secure storage வசதியையும் இயக்குமாறு (Turn On) மெட்டா அறிவுறுத்தியுள்ளது. Secure Storage அம்சத்தை இயக்க முதலில் மெசஞ்சர் செயலியை திறந்து Settings ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதில் Privacy & safety என்ற ஆப்ஷனை தேர்வு செய்து End-to-end encrypted chats-க்கு சென்று Message storage-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் Secure Storage இயக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராமில் 18 வயதிற்குட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!
இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்கு உட்பட்ட பயனர்களுக்கான டீன் கணக்கின் (Teen Accounts) கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவர உள்ளது. திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் 18 வயதுக்கு உட்பட்ட பயனர்களின் கணக்குகள் தானாக 13+ setting-க்கு மாற்றப்படுகிறது. பெற்றோரின் அனுமதியின்றி இந்த settings-ஐ மாற்ற முடியாது. இதில், ஆபாச வார்த்தைகள், பாலியல், ஆபத்தான சண்டை காட்சிகள், மது மற்றும் புகையிலை பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உள்ளடக்கிய வீடியோக்கள் பய னர்களுக்கு மறைக்கப்படும். இது தொடர்பான பரிந்துரையும் வழங்கப்படாது. மேலும், பதிவு களுக்கு கொடுக்கப்படும் கமண்ட் களை பார்க்கவோ, பதிவிடவோ முடியாது. அதேபோல் அடுத்த ஆண்டு முதல், 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் மேற்கொள்ளக்கூடிய ஏஐ உரையாடல்களை இது மேலும் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; பிற நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று மெட்டா அறிவித்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்துள்ள கூகுள்!
கூகுள் கணக்கு மற்றும் கூகுள் மெசேஜஸ் செயலியில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் கணக்கை மீட்டமைப்பு (Recovery) செய்ய நம்பிக்கையான தொடர்புகளை (Recovery Contacts) சேர்க்கும் வசதி, பாஸ்வேர்டு இல்லாமல் கைபேசி எண்ணை வழங்கி login செய்யும் வசதி, கூகுள் மெசேஜஸில் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை தானாக கண்டறிந்து எச்சரிக்கும் ஸ்காம் (Scam) பாதுகாப்பு வசதி, குறியீடு மூலம் பாதுகாப்பான உரையாடல் மேற்கொள்ளும் வசதி மற்றும் மோசடி குறித்த விழிப்புணர்வு அம்சங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.