தீபாவளியை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலை 500-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் விடுப்பின்றி பணி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காவல்துறை, போக்குவரத்து, தீய ணைப்புத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தங்கள் பணிகளைத் தொடங்கி விட்ட நிலையில், சுகாதாரத்துறையும் முழு தயார்நிலையில் உள்ளது. குறிப்பாக, கோவையில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளர்கள் தீபாவளிப் பண்டி கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கோவை யில் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் பைலெட்டுகள் (ஓட்டுநர்கள்) மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வரும் மூன்று நாட்களுக்கு (அக். 19, 20, 21) விடுப்பு இன்றிப் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள னர். இதுகுறித்து பேசிய 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்ட இயக்குநர் கணேஷ், “தீபா வளியை முன்னிட்டு கோவையில் 65 ஆம்பு லன்ஸ்கள் மற்றும் 4 இரு சக்கர ஆம்பு லன்ஸ்கள் தயார்நிலையில் உள்ளன. இந்த மூன்று நாட்களும் தடையின்றிச் சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து வாகனங்களும் இயங்க வேண்டும்; பழுது ஏற்பட்டால் உடனடி யாக மாற்று வாகனம் வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வழக்கமாக ஆம்புலன்ஸ் வாக னங்கள் நிற்கும் இடங்களைத் தவிர்த்து, இம்முறை ‘ஹாட்ஸ்பாட்’ கண்டறியப்பட்டு, அங்கு நிறுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளைக் கொண்டு, அதிக அவசர அழைப்புகள் வந்த இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதிகள் கண்ட றியப்பட்டு, அங்கிருந்து வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 250-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற னர். பண்டிகை காலங்களில் இது 300 முதல் 350-ஆக உயரும். கடந்த தீபாவ ளியின்போது 400-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட னர். இம்முறை 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் வகையில், அதற்கேற்ப ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இம்முறை 108 ஆம்புலன்ஸ்க ளில் தீக்காயத்திற்கான சிறப்பு முதலு தவிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இத னைப் பயன்படுத்துவது குறித்து பைலெட் டுகள் மற்றும் மருத்துவ உதவியாளர் களுக்குத் தீ விபத்து கிட் விளக்கம் மற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் பயன்படுத்த தீ அணைப்புப் போர்வையும் தயார்நிலையில் உள்ளது. ஆம்புலன்ஸில் வரும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதேபோல, மருத்துவம னைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக் கப்பட்டு ‘அலர்ட்’ கொடுக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தீக்காயத்திற் கென கூடுதல் படுக்கைகளுடன் தனி வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. “இந்த மூன்று நாட்களுக்கு விடுப்பு இல்லாமல் பைலெட்டுகள் மற்றும் மருத்துவ உதவி யாளர்கள் பணியாற்ற உள்ளனர். பண் டிகை நாட்களிலும் தங்கள் குடும்பத்தை விட்டு மக்கள் பணியில் ஈடுபட உள்ள னர்,” என்றார். -கவி