tamilnadu

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி நாமக்கல், அக்.18- குமாரபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், அதிர்ச்சி யடைந்த பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எல்லை பகுதியில் உள்ள வளையக்கரனூர் என்ற பகுதியில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பராமரிப்பு பணி கள் மட்டும் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்க ளாக அப்பகுதியில் மழை பெய்த வண்ணம் உள்ளதால் வியாழனன்று பள்ளியின் மேற்கூறை பள்ளி நடந்து கொண்டி ருந்த பொழுது இடிந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளி  மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு  சென்று விட்டனர். வீட்டுக்கு சென்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரி டம் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் அச்சமாக இருப்பதாக தெரிவித் துள்ளனர். இதனால், பள்ளி உயர் குறையை உரிய முறை யில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்ப மறுத்தனர்.