tamilnadu

img

வர்க்க போராளி தோழர் எம். செல்லமுத்து நினைவு தினம் கடைப்பிடிப்பு

வர்க்க போராளி தோழர் எம். செல்லமுத்து  நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருவாரூர், ஜூலை 24-  சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வர்க்க போராளியுமான, மறைந்த தோழர் எம்.செல்லமுத்துவின் 28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் புலிவலத்தில் அமைந்துள்ள சிபிஎம் ஒன்றிய அலுவலகத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், செல்லமுத்துவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, மூத்த தோழர் என். இடும்பையன், விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஜி. பவுன்ராஜ், வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே. இளையராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். கோசிமணி உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர்.