சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறனின் மனைவி கே.வசந்தகுமாரி காலமானார் கே.பாலகிருஷ்ணன் - தலைவர்கள் அஞ்சலி
சிதம்பரம், டிச.28 - சிஐடியு மாநிலத் தலைவரும், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான ஜி. சுகு மாறனின் மனைவி கே.வசந்தகுமாரி (66) கால மானார். நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் மனித வளத் துறையில் உதவி மேலாளராகப் பணி யாற்றி ஓய்வு பெற்ற வசந்தகுமாரி, உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் நெய்வேலி இந்திரா நகரில் உள்ள இல்லத் தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் அ.சவுந்தரராசன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலத் துணைத் தலைவர்கள் மாலதி சிட்டிபாபு, எஸ். ரங்கராஜன், மாநிலத் துணை பொதுச் செய லாளர்கள் வி.குமார், இ.முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் சி.திருவேட்டை, முரளி, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், செ.முத்துக்கண்ணன், கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் தி. ஜெய்சங்கர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் நேரு, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச் செல்வன், மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ். வாலண்டினா, விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலை வர் அபு, திமுக மேற்கு மாவட்டப் பொருளாளர் தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் துரை உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் தொழிற்சங்கப் பிர முகர்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த வசந்தகுமாரி - சுகுமாறன் தம்பதி யினருக்கு பிரதீப் என்ற மகனும், பிரதீபா, பிரதிமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வசந்தகுமாரி மறைவுச் செய்தியறிந்த கட்சி யின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் தொலைபேசி மூலம் சுகுமாறனுக்கு ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து அவ ரது இல்லத்தின் முன்பு இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இதில் தலைவர்கள் இரங்கல் உரை யாற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர்.
