‘பிப். 12’ வேலைநிறுத்தம்-மறியல் வெற்றி வர்க்க - வெகுஜன அமைப்புக்களுக்கு சிஐடியு மாநிலக்குழு வாழ்த்து!
சென்னை, பிப். 13 - பிப்ரவரி 12 - நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த அனைத்து வர்க்க - வெகு ஜன அமைப்புகளுக்கும் சிஐடியு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: போராட்டத்தை ஆதரித்த அரசியல் இயக்கங்கள் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர் விரோத கொள்கைகளை முறி யடிக்கும் வகையில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தை பல்வேறு அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் அமைப்புகளும் ஆதரித்தன. ஒன்றிய அரசு நிறுவனங்கள் முடங்கின தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்து, மின்சாரம், காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி என்.எல்.சி, திருச்சி பி.ஹெச்.இ. எல், சேலம் ஸ்டீல் பிளாண்ட், எல். அண்டு டி. -1, 2, அசோக்லேலைண்டு 1,2, கிருஷ்ண கிரி, எண்ணூர், வல்லூர் அனல்மின்நிலை யம், பெட்ரோலிய துறை நிறுவனங்கள், கனிமம் உள்ளிட்ட நிறுவனங்களிலும், தனி யார் ஆலைகள், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களான யமஹா, அப்பல்லோ, ரோக்கா பாரிவர், தாய் ஸ்மித் யசாகி, டி.டி.கே, ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட வற்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் பணி யாற்றும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறு வனத்தில் பணியாற்றும் தொழிலாளர் களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அதே போல் தனியார் நிறுவனங்கள், கோவை மாநகரில் சிப்காட் உட்பட இன்ஜி னியரிங் தொழிற்சாலைகளில் முழுமை யான வேலை நிறுத்தம் நடைபெற்றது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. பணிகளைப் புறக்கணித்த அரசுத் துறை ஊழியர்கள் ஊரக உள்ளாட்சித் துறையில், நக ராட்சி, ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத் தில் பங்கேற்றனர். மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள், ஆட்டோ, கட்டுமானம், சாலைப் போக்கு வரத்து, அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம், ஆஷா உள்ளிட்ட திட்டப் பணியாளர்களும் பல்வேறு அமைப்புசாரா பிரிவினரும் மோடி ஆட்சியின் தொழிலாளர் விரோத கொள் கைகளுக்கு எதிராக பணியை புறக் கணித்து மறியல் போராட்டம் செய்துள்ளனர். ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு முன்பு மறியல், சாலை மறியல், ரயில் மறியல் என பல வடிவங்களில், இந்த மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து உள்ளது. போராட்டக் களத்தில் 30 சதவிகிதம் பெண்கள் இந்த போராட்டத்தில் சிஐடியு சார்பில் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பல மையங்களில் பங்கெடுத் துள்ளனர். இதில் 30 சதவிகிதத் திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கெடுத்துள்ளனர். கடந்த காலத்தில் நடந்த வேலை நிறுத்தங்களை விடவும், வலுவான எண்ணிக்கையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தொழி லாளர்களும், விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்களும், போராட் டங்களில் பங்கெடுத்திருப்பது பாராட் டுக்குரியது. மாதர், மாணவர், வாலிபர்கள் பங்கேற்பு இந்த வேலை நிறுத்த போராட் டத்தையும், மறியல் போராட்டத்தை யும், ஆதரித்து மாணவர், வாலி பர், மாதர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களின் சார்பில், ஆயிரக்கணக்கா னோர் மறியலில் பங்கெடுத்து கை தாகி இருப்பதை இந்திய தொழிற் சங்க மையத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் பாராட்டுகிறோம். மோடி ஆட்சியில் தொழிலாளர் விரோத கொள்கைகளை பின்னுக்குத் தள்ள மக்கள் தங்கள் எதிர்ப்பு ணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா உடனான கட்டற்ற வர்த்தக உடன்பாட்டினை, எவ்வித தயக்கமும் இல்லாமல், பாஜக ஆட்சி மேற்கொண்டு இருக்கும் நிலையில், நவீன காலனி ஆதிக்கத்திற்கு வழி வகை செய்கிறது. ஏகாதிபத்தியத் தின் மனிதவளக் கொள்ளை, வணிகக் கொள்ளை, இயற்கை வளக் கொள்ளை ஆகியவற்றிற்கு துணை போவதாக அமைந்திருக்கும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி தான், தேச நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது. நாடு அடமானம் போவதைத் தடுக்கவே வேலைநிறுத்தம் தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தமும் மறியல் போராட் டமும், நாட்டை ஏகாதிபத்தியத்திடம் அடமானம் வைக்கக் கூடாது என்று கடந்த காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மகாத்மா காந்தி முதல் வ.உ.சி, பாரதி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் நடத்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். தமிழகத்தில் அனைத்து சங்கங் களும் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் கடந்த காலங்களைவிட அதிகமான பங்கேற்புடன் வெற்றிகரமாக நடை பெற்றுள்ளது. எதிர்கால ஒற்று மையை வலுப்படுத்த உதவியுள்ளது. அதேபோல் இந்த வேலை நிறுத் தத்தில் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக செய்த வங்கி, காப்பீடு, அரசு ஊழியர் உள்ளிட்ட பல்வேறு வர்க்க - வெகுஜன அமைப்புகளுக் கும் சிஐடியு மாநிலக்குழு வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
