tamilnadu

img

மார்ச் 24-இல் நாடாளுமன்றம் முன்பு பேரணி திருச்சியிலிருந்து புறப்பட்ட சிஐடியு நிர்வாகிகள்

மார்ச் 24-இல் நாடாளுமன்றம் முன்பு பேரணி
திருச்சியிலிருந்து புறப்பட்ட சிஐடியு நிர்வாகிகள் 

வாகன ஒட்டிகளை கொலை குற்றவாளி யாக்கி 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் பி.என்.எஸ் 106 (1,2) சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சர்வதேச மார்கெட்டில் சரிபாதியாக குறைந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். பல விதமான கட்டணங்கள், அபராதத் தொகை அதிகரிப்பை கைவிட வேண்டும். சாலை போக்குவரத்து திருத்தங்களை கைவிட வேண்டும். சுங்க கட்டண கொள் ளையை கைவிட வேண்டும். 15 ஆண்டு கால வாகனங்களை இயக்க தடை போடக் கூடாது. ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மோட்டார் வாகனத் துறையை தனியார்மயமாக்குவதை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 அன்று சாலை போக்குவரத்து தொழி லாளர்கள் (ஆட்டோ தொழிலாளர்கள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கார் வேன், லாரி உட்பட, அமைப்பு சாரா ஓட்டு நர்கள் அனைவரும்) தில்லியில் நாடாளு மன்றம் முன்பு பேரணியாக செல்ல உள்ளனர்.  இப்பேரணியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் மாணிக்கம், முருகன், பிரபு தலைமையில் 3 பெண்கள் உள்பட 20 பேர் திருச்சியிலிருந்து வைகை எக்ஸ்பிரஸில் செவ்வாயன்று புறப்பட்டனர். அவர்களை சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்  ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், விரைவு போக்குவரத்து தலைவர் கருணாநிதி, பொருளாளர் அருள், மகேந்திரன் ஆகி யோர் துண்டு அணிவித்து வாழ்த்தி வழி அனுப்பினர்.