tamilnadu

img

குழந்தைகள் புத்தகத் திருவிழா தமிழக அரசுக்கு சிறார் எழுத்தாளர் வேண்டுகோள்

உதயசங்கர்
1.    2023 ஆம் ஆண்டு தமிழக அரசும் பப்பாசியும் இணைந்து குழந்தைகளுக்காக ஒரு புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த திட்டமிட வேண்டும்.
2.    கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் படிப்பகங்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும்
3.    குழந்தைகள் கையில் எடுத்து புரட்டிப் பார்க்கும் வகையில் புத்தக அலமாரிகள் அவர்கள் உட்கார்ந்து படிக்கும் வகையில் சிறிய நாற்காலிகள் என்று கவனம் எடுத்து அந்த புத்தகக் கண்காட்சியின் அரங்குகளை அமைக்க வேண்டும்.
4.    ஒவ்வொரு புத்தக அரங்கு வரிசையின் முடிவிலும்  குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவை ஏற்படுத்த வேண்டும்.
5.    புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு சாமான்கள் கடைகளையும் வரிசைக்கு இரண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். 
6.    குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள், ஓவியங்கள், பொம்மைகள் என்று மொத்த அரங்கும் குழந்தைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
7.    ஒவ்வொரு நாளும் சிறார் இலக்கியம் பற்றிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் 
8.    குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வும் அவர்களுடைய திறனறி பயிற்சிகளும் நடத்தப்பட வேண்டும்.
9.    குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வாசிப்பு பயிற்சி முகாம்களும் அதில் கலந்து கொள்ளும் குழந்தைகளை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும்.
10.    தினமும் குழந்தைகள் சிறார் எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், ஓவியர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் குழந்தை நல செயல்பாட்டாளர்கள் என்று அனைவரிடமும் குழந்தைகள் உரையாடும் வகையில் அரங்குகள் ஒருங்கமைக்கப்பட  வேண்டும். 
11.    பொதுவாக பள்ளி விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சியை ஒரு வார காலம் நடத்துவதற்கு திட்டமிடலாம்.
12.    முதலில் சென்னையில் தொடங்கி பிறகு அனைத்து மாவட்டங்களிலும் சிறார் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் அறிவுப் புரட்சி நிகழத் தொடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
13.    இந்த பரிந்துரையை பரவலாக கொண்டு செல்வதும் அது அரசின் கவனத்திற்கும் பப்பாசியின் கவனத்திற்கும் சென்று சேர்வது உங்கள் கைகளில் இருக்கிறது.