மீனவர்களை விடுவிக்க முதல்வர் வலியுறுத்தல்
சென்னை: இராமேஸ்வரத் தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப் படும் பத்தாவது சம்பவம் இது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 110 தமிழக மீனவர் களையும், அவர்களது படகு களையும் விடுவிக்க வலு வான தூதரக நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
.‘போர்வை உறைகளில் தமிழ்’
மதுரை: ரயிலில் உள்ள குளிர்சாதனப் (AC) பெட்டிகளில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை உறைகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என 3 மொழிகளில் அச்சடித்து வழங்க சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறு வனத்திற்கு மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ள செய்தி பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ.3 லட்சம் நிவாரணம்
சென்னை: மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்ற நிலையில் 650 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சோழவந்தானை அடுத்த கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மகன் மகேஷ் பாண்டி, மாடு முட்டியதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தின ருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்
நீலகிரி: கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதி யில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேந்திரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் சிறப்பு மையம் திறப்பு சென்னை:
சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திங்களன்று திறந்து வைத்தார். சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறை சார்பில் எஸ். ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக் கான உயர் சிறப்பு மையம் என்ற பெயரில் இந்த மையம் அமைக் கப்பட்டுள்ளது. வெப்ப பரிமாற்றம், குளிரூட்டும் அமைப்புகள், திரவ இயக்கவியல் ஆராய்ச்சிக்கான தொடர்பு மையமாக இந்த புதிய மையம் செயல்படும். அடுத்த தலைமுறை விண்கலம், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களுக்கு இவை மிகவும் அவ சியம் என இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன் கூறினார்.
சீமான் மனு தள்ளுபடி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக் குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப் பட்டது. குறிப்பாக மதுரை, கோவை, சேலம், கடலூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் சுமார் 53-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளை யும் ஒருங்கிணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “எந்த ஒரு விபரங்களும் இல்லாமல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.