tamilnadu

img

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

தஞ்சாவூர், ஜன.5 - தஞ்சாவூரில் மறைந்த திமுக மூத்த  தலைவர் எல்.கணேசனின் (92) உட லுக்கு தமிழக முதலமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.  திமுக-வின் உயர்நிலை செயல்திட்டக்  குழு உறுப்பினராக இருந்த எல்.கணே சன் வயது மூப்பின் காரணமாக தஞ்சா வூரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரி ழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்  அறிக்கை வெளியிட்டார். பின்னர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூரில் உள்ள விமானப்படை  தளத்துக்கு ஞாயிறன்று மாலை 4.50 மணிக்கு வந்து, அங்கிருந்து கார்  மூலம் மருத்துவக் கல்லூரி சாலை, பாலாஜி நகரில் உள்ள எல்.கணேச னின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி கமலா, மகள் மற்றும் மகன்களிடம் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே. என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழி யன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், ரகுபதி, எம்.பி., க்கள் டி.ஆர்.பாலு, ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், க.அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், நா.அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் சிபிஎம் சார்பில் மாநிலச்  செயலாளர் பெ.சண்முகம், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், மாவட்டச் செயலாளர்கள் சின்னை.பாண்டியன் (தஞ்சாவூர்), எஸ்.சங்கர் (புதுக்கோட்டை), டி.முருகையன் (திருவாரூர்), மூத்த தலைவர் என்.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச்  செயலாளர் என்.குருசாமி உள்ளிட்ட சிபிஎம்  நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.