tamilnadu

img

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை  துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை/திருவாரூர், மார்ச் 31- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை  முன்னிட்டு, மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் 234 தொகுதி களிலும் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது முதற்கட்ட தேர்தல் பரப்பு ரையை மார்ச் 31 அன்று மாலை திருவாரூரில் தொடங்கினார்.  மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த ஊரான திருவா ரூரில், தெற்கு ரத வீதியில் அமைக்கப் பட்ட பொதுக்கூட்ட மேடையில், திருத் துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதி களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட் பாளர்கள் பூண்டி  கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, க.மாரிமுத்து, நெல்லை முகமது முபாரக் ஆகியோருக்கு உதயசூரியன், கதிர் அரிவாள் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு முத லமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.   திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, வை.செல்வராஜ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி,  கரூரில் இன்று பரப்புரை திருவாரூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சியில் தங்கிய முதலமைச்சர், ஏப்ரல் 1 புதன்கிழமை காலை திருச்சி உழவர் சந்தை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டி யிடும் அமைச்சர் கே.என். நேரு, திரு வெறும்பூர் தொகுதியில் போட்டி யிடும் அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி மற்றும் 9 தொகுதி களில் கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகிறார். மாலை 5 மணிக்கு கரூர் ராயனூ ரில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.