ஈரோடு, இராமநாதபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
சென்னை, பிப். 15 தமிழகத்தின் தொன்மை மற்றும் வணிகச் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில், ஈரோடு மற்றும் இராம நாதபுரம் மாவட்டங்களில் அமைய வுள்ள புதிய அருங்காட்சியகங் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நொய்யல் அருங்காட்சியகம் (ஈரோடு): ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையத்தில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘நொய்யல் அருங்காட்சியகம்’ அமையவுள்ளது. பதிற்றுப்பத்தில் ‘கொடுமணம்’ என்று புகழப்பட்ட கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல் பொருட்களைக் காட்சிப்படுத்த இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படு கிறது. இங்கு ஏற்கனவே நடந்த அக ழாய்வுகளில் இரும்பு-எஃகு உருக்கா லைகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள், ரோமப் பேரரசின் நாணயங்கள் மற்றும் செப்பால் ஆன புலிச் சின்னம் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. கொடுமணல் தளம் பண்டைய உலகத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இது பாலமாக அமையும். நாவாய் அருங்காட்சியகம் (இராமநாதபுரம்): இராமநாதபுரம் மாவட்டம், மண்ட பம் பகுதியில் 34.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘நாவாய் அருங்காட்சிய கம்’ கட்டப்படவுள்ளது. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகள், ரோம நாட்டிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான கடல் வழி வணிகத்தை உறுதி செய்துள்ளன. அந்த வரலாற்றுச் சான்றுகளை உள்ள டக்கி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது.