சென்னை, நவ.24- இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு, நவம் பர் 26 ஆம் தேதி அரசு அலு வலகங்கள், அரசு சார்ந்த மற் றும் தன்னாட்சி நிறுவனங் கள், பள்ளி மற்றும் கல்லூரி களில் இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் முகப்பு ரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல் வேறு போட்டிகளை நடத்திட வும் முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு: மக்களாட்சித் தத்துவத் தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வள மான பாதையில் முன்னெ டுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம் பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண் டினை சிறப்பாகக் கொண்டா டும் வகையில் வரும் 26.11. 2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செய லகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன் றம் மற்றும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் உள் ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அர சின் அனைத்து அலுவலகங் கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங் கள், தன்னாட்சி அரசு நிறு வனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி களிலும் இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் முகப்பு ரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டு, அதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச் சுப் போட்டிகள், கருத்தரங்கு கள், வினாடி வினா நிகழ்ச்சி களை நடத்தவும் அரசு ஏற் பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.