‘ஓரணியில்’ திரளும் மக்கள்: முதல்வர் பெருமிதம்
அதிமுக-பாஜக சதித் திட்டத்தை உணர்ந்து
சென்னை, ஜூலை 12 - திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டு இருக்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரு மிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க உறுப்பினர்களாக இணைய விருப்பம் உள்ளதா என்று கேட்கும்போது, அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக் கும் பயனளிக்கிறது என்று தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணி அல்ல. தமிழ்நாட்டை, தமிழ் நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து மீண்டும் நூறாண்டு களுக்கு பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்ற னர் தமிழ்நாட்டு மக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “விறுவிறுவென நடைபெற்று வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்” என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.