32 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நந்தனார் ஆலய குடமுழுக்கு
சிதம்பரம், ஜன.1- சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் சுவாமி சகஜானந்தா நினைவிடம் கோயிலாக உள்ளது . இது 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜன.28-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்னம் தெரிவித்தார். சிதம்பரம் ஓமக் குளத்தில் உள்ள நந்த னார் மடத்தில் புதனன்று குட முழுக்கு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்ட த்திற்கு நந்தனார் கல்விக் கழக தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் உறுப்பினருமான கே. ஐ.மணிரத்னம் தலைமை தாங்கினார். இதில் கல்விக் கழக செயலாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகி கள் டிகே.வினோபா, ஐஎன்டியுசி மாநில செய லாளர் கஜேந்திரன், மண லூர் ரவி, காங்கிரஸ் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அரவிந்த் மணி ரத்தினம், மாநில இளை ஞரணி முன்னாள் செய லாளர் கமல் மணிரத்தினம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகி கள் உடன் இருந்தனர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய மணி ரத்னம், சிதம்பரம் ஓமக் குளம் பகுதி நந்தனார் மட த்தில் சுவாமி சகஜானந்தா அடக்கம் செய்யப்பட்ட சமாதி கோவில் உள்ளது. இங்கு 1994-ஆம் ஆண்டு மறைந்த தலைவர் இளைய பெருமாள் தலைமையில் கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது இத்திருக்கோவில் சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ஜனவரியில் மிக விமர்சையாக இவ்விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் ஆதி திராவிட மக்களுக்காகவும் கல்வி சேவைக்காகவும் இந்த மடம் மற்றும் கோயில் உள்ளது. சுவாமி சகஜானந்தா தலித் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான உரிமையை பெற்றுத் தந்தவர். அந்த மகானுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நந்தனார்மட வளாகத்தை புண்ணிய பூமியாக மாற்ற இருக்கின்றோம் அதற் கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மடத்தில் நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப் பட்டுள்ளது. அதில் நந்த னாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாற்றுப்பதிவுகள் வைக்கப்படும். இந்த கோவில் குடமுழுக்கிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்து அதிகாரிகளையும் அழைக்க உள்ளோம். இத்திருக்கோவிலில் மகாத்மா காந்தி, ஜவஹர் ரால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முத்தமிழறிஞர் கலைஞர், இவர்களுடன் 51 தேசிய தலைவர்கள் கிட்டத் தட்ட 10 குடியரசு தலை வர்கள் வந்து சென்ற இடம் ஆகும். கடந்த 1934 இல் இரண்டு நாட்கள் மகாத்மா காந்தி இந்த மடத்தில் தங்கி இருந்துள்ளார். அப்ப டிப்பட்ட போற்றுதலுக்குரிய இடத்தை உலகறிய செய்ய வேண்டும் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை கவனித்த கல்வி கழகம் பராமரிப்பு செய்து 28ஆம் தேதி அன்று இவ்விழா நடைபெற உள்ளது. சுவாமி சகஜானந்தாவால் நந்த னார் பெயரில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப் பட்டது. தற்போது தமிழ் நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை யின் கீழ் செயல்படுகிறது என மணி ரத்னம் தெரிவித்தார்.
