tamilnadu

img

நூறுநாள் வேலைத் திட்ட பெயர் மாற்றம் பாஜக அரசின் குரூரமான நடவடிக்கை!

காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதியம் கோரி டிச.22 முதல் தொடர் போராட்டம்! சாலைப் பணியாளர் சங்க மாநில மாநாடு தீர்மானம்

சேலம், டிச.13- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங் கத்தின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத் தின் ஒன்பதாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி யில் நடைபெற்றது.  டிச. 12, 13 ஆகிய இரண்டு நாட்  கள் நடைபெற்ற இந்த மாநாட்டில்,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசுத் துறையில் பணியாற்றும் அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழ ங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், சாலைப்பணியா ளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை முன்வைத்து, டிசம்பர் 22  அன்று அனைத்து கோட்ட பொறியா ளர் அலுவலகங்கள் முன்பாகவும் ஒப்பாரி முழக்கப் போராட்டம் நடத்துவது, ஜனவரி 27 அன்று மண்டல அளவில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக பறையிசை முழக்கப் போராட்டம் நடத்துவது, நெடுஞ்சாலை ஆணையத்தை முறியடித்து நெடுஞ்சாலைத் துறையை அரசுத்  துறையாக பாதுகாக்க வலியுறுத்தி  பிப்ரவரி 2 முதல் 10-ஆம் தேதி வரை  நீதி கேட்டு நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டத் தில் தக்கலை, கிருஷ்ணகிரி மாவட்  டத்தில் ஓசூர் ஆகிய மூன்று முனை களில் இருந்து தமிழகம் முழு வதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்கள் நடத்துவது, பிப்ரவரி  11 அன்று திருச்சியில் மாநில உரிமை மீட்பு மாநாட்டை நடத்துவது,  இதன்தொடர்ச்சியாக, பிப்ரவரி 17 அன்று முதல் சாலைப் பணியா ளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை நிறைவேற்றும் வரை, திரு வண்ணாமலையில் நெடுஞ்சா லைத்துறை அமைச்சர் இல்லம் முன்பாக தொடர் காத்திருப்பு உரிமை போர் இயக்கத்தை நடத்து வது என மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது. முன்னதாக, மாநாட்டின் துவக்க மாக, சனிக்கிழமையன்று மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின்  மாநில துணைப் பொதுச்செயலா ளர் கே.மகாலிங்கம் பேரணி யைத் துவக்கி வைத்தார். நெடுஞ்சா லைத்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ. ரெங்கசாமி,  விதொச மாநிலத் தலைவர் எம்.  சின்னதுரை எம்எல்ஏ, அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ. சோமசுந்தரம் ஆகி யோர் உரையாற்றினர். மாநில பொருளாளர் இரா. தமிழ் நன்றி கூறி னார்.