மருத்துவக் கழிவுகள் எரிப்பு விவகாரம் ஒரு மாதத்திற்குப் பின்பு வழக்குப்பதிவு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கழிவுகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு மாதத்திற்குப்பின்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெல்லை, தென் காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் ஏரா ளமானோர் புறநோ யாளியாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நாள் முழுதும் மருத்துவமனை வளாகம் நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.கடந்த பிப்ரவரி 26ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அப்போது அறுவை சிகிச்சை மருத்துவக் கழிவுகள், பாட்டில்கள், காட்டன் கழி வுகளை பணியாளர்கள் சிலர் அங்கு கூட்டி வைத்து எரித்தனர். இதனால் மருத்துவமனையை சுற் றியுள்ள எம்.ஜி.ஆர்., நகர், பெரியார் நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகு திகளில் மக்களுக்கு சுவாச பிரச்னை, தொற்று நோய்கள் பரவும் சூழல் ஏற்பட் டது என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குப் பின்பு, கடந்த 2ம் தேதி வழக்குப்ப திவு செய்துள்ளனர்.வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குறித்த விபரங் கள் தெரியவில்லை என குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை நடக்க வுள்ள சூழ்நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.