tamilnadu

img

மகேந்திரகிரி விஞ்ஞானி மரணம் குறித்த வழக்கு எட்டு வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

மதுரை:
மகேந்திரகிரியிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய  விஞ்ஞானிஉயிரிழந்த வழக்கில் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் எட்டு வாரங்களில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 13.7 2019 அன்று எனது கணவர்தினேஷ்,அவருடன் பணிபுரியும் நண்பர்களுடன்   இசக்கி அம்மன்கோவில் அருகே உள்ள ஆனந்தன்கால்வாயில் குளிக்கச் சென்றார்.  சிறிதுநேரத்தில்,  எனது கணவர் நீரில்  மூழ்கிவிட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது அவர் உடலில் பலத்தகாயங்கள் இருந்தன.  எனது கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது. உடன் குளிக்கச் சென்றவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல்இருக்கும்பொழுது,  எனது கணவர் மட்டும்  பலியாகி உள்ளது சந்தேகத்தைஏற்படுத்துகிறது. இது தொடர்பாக  பூதபாண்டிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது கணவரின்  இறப்பு   குறித்த விசாரணையை காவல்துறையின் வேறு அமைப்புக்கு மாற்றிவிசாரிக்க உத்தரவிட  வேண்டுமெனக் விஞ்ஞானியின் மனைவி கோரியிருந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு விசாரணையை பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் எட்டுவாரங்களில் முடிக்கவும், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கு விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
=-===