districts

மதுரை பரவை பேரூராட்சி தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.1- மதுரை  மாவட்டம், பரவை பேரூராட்சி தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த வீரபுத்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மது ரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இதில்  பழைய வார்டு எண் 15 மற்றும்  புதிய வார்டு எண் 4 பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பரவை பேரூராட்சி 1996 ஆம் ஆண்டு முதல் 4 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்து 4 தேர்தல் களின் போது பரவை பேரூராட்சி சேர்மன் பதவி பொதுப்பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பொதுப் பணித்துறை மற்றும் நீர் வழங்கல் வெளியிட்ட அரசாணையின்படி  பரவை பேரூராட்சி சேர்மன் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட் டது. ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படவில்லை. 17 ஜனவரி 2022ஆம் ஆண்டு தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நீர் வழங்கல் துறை சார் பாக வெளியிடப்பட்டுள்ள அர சாணையின்படி மீண்டும் பரவை பேரூராட்சி சேர்மன் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இது குறித்து அதிகாரி களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே 2022ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பொதுப்பணித் துறை மற்றும் நீர் வழங்கல் துறை  சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் மேலும் இந்த அரசாணையை ரத்து செய்து  2016ஆம் ஆண்டு அரசாணையின் படி பரவை பேரூராட்சி சேர்மன் பதவியை பழங்குடியினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பா சத்தியநாரா யணா, வேல்முருகன் அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற் றது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசார ணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.