tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு!

சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்து தென்மாநில அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு, தமிழக அமைச்சர் கே.என். நேரு மற்றும் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்தனர்.

மார்ச் 22 கூட்டத்தில் பங்கேற்பேன் !

சென்னை: “மக்கள் தொகை அடிப்படையிலான மக்கள வைத் தொகுதி சீரமைப்பு மாநிலங்களுக்கு எதிரானது. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். நடக்கப் போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. மாறாக தென்னிந் தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டும் கூட்டத்தில், காங்கிரஸ்  மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன்” என்று  தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித் திருக்கிறார்.  

அரசுப் பள்ளியில் பயில ஆர்வம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று  வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்து ரைத்து மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை நடத்தி  வருகிறது. இதனால், கடந்த 7 நாட்களில் 41 ஆயிரத்து 931  மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

நவீன இந்தித் திணிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய வற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதில ளிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித்  திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இந்த இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க  வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘எக்ஸ்’ தளத்தில்  தெரிவித்திருக்கிறார்.

சீமான் வீட்டு காவலாளிக்கு ஜாமீன் !

சென்னை: சீமான் வீட்டில் காவல்துறை ஒட்டிய சம்மனைக் கிழித்து பணி செய்ய விடாமல் தடுத்தது, போலீ சாரை தாக்கியது தொடர்பாக, சீமான் வீட்டு பணியாளர் சுபா கர் மற்றும் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் ஆகியோர் மீது இரு  வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருவரும் கைது செய்யப் பட்டிருந்தனர். இந்த நிலையில், அரசு அதிகாரிகளை பணி  செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி யுள்ளது.  மறு உத்தரவு வரும் வரை இரண்டு பேரும் பூக்கடை  காவல் நிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

 பரந்தூரில் சிறப்பு கூட்டம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய  விமான நிலையம் அமைக்க ஒன்றிய - மாநில அரசுகள் திட்ட மிட்டு வருகின்றன. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம்  கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்ற னர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் விண்ணப்ப  பரிசீலனை தொடர்பாக தில்லியில் சிறப்புக் கூட்டம் நடை பெற்றது. இதில், மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற் கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதி வழங்கப்பட உள்ளது.

தொழில் தகராறில் துப்பாக்கிச்சூடு

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டின் பின்புறத் தெருவில் வியாபார போட்டி யில் இரு நபர்களிடையே மோதல் ஏற்பட்டதில் துப்பாக்கிச்சூடு  நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர் கம்பி குத்தியதாக கூறி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சையில் குண்டு கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.