tamilnadu

பெங்களூரில் ‘புல்டோசர் ராஜ்ஜியம்’ - ஏழைகளின் கனவுகளைச் சிதைக்கும் மனிதாபிமானமற்ற நடவடிக்கை

பெங்களூரில் ‘புல்டோசர் ராஜ்ஜியம்’ - ஏழைகளின் கனவுகளைச் சிதைக்கும் மனிதாபிமானமற்ற நடவடிக்கை

பெங்களூரு கர்நாடக மாநிலம் யெலகங்கா வில் உள்ள பக்கீர் காலனியில், பல தசாப்தங்களாக வசித்து வந்த தலித் மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகள் ‘புல்டோசர்’ கொண்டு இடிக்  கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபி மானமற்றச் செயலை நேரில் பார்வை யிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம், காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக் கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். சிதைக்கப்பட்ட வாழ்வாதாரம் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதரா பாத்திலிருந்து பிழைப்புத் தேடி வந்த  மெய்தாம்பி போன்ற நூற்றுக்கணக் கான ஏழைகளின் சிறிய கனவு இல்லங்  கள் வெறும் 3 மணி நேரத்தில் தரை மட்டமாக்கப்பட்டன. மெய்தாம்பியின் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும், எவ்வித முன்ன றிவிப்புமின்றி காவல்துறை மற்றும் அதி காரிகள் புல்டோசர்களுடன் அதிகாலை யிலேயே புகுந்துள்ளனர். உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மண்  ணோடு மண்ணாகத் தூக்கி எறியப்பட்ட தும், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதும் அந்தப் பகுதியின் அவல நிலையைப் பறைசாற்றுகின்றன. அரசின் பொய் முகத்திரை ‘சட்டவிரோத குடியேற்றங்கள்’ அகற்றப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணத்தை ஏ.ஏ. ரஹீம்  முற்றிலுமாக மறுத்துள்ளார். பாதிக்  கப்பட்ட மக்களிடம் ஆதார், ரேஷன்  கார்டு மற்றும் வாக்காளர் அடையாள  அட்டைகள் இருப்பதைச் சுட்டிக்காட் டிய அவர், மனித உரிமை அமைப்பு கள் இந்த நிலத்திற்கான உரிமைப் பத்தி ரம் (Title deed) மக்களிடம் இருப்பதை  உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  180 முதல் 200 வீடுகள் இடிக்கப்பட்டதில்  சுமார் ஆயிரம் பேர் வீதிக்குத் தள்ளப்  பட்டுள்ளனர். மவுனம் காக்கும் மக்கள் பிரதிநிதிகள் கர்நாடக வருவாய்த்துறை அமைச் சர் கிருஷ்ண பைரஹாவாவின் சொந்  தத் தொகுதியிலேயே இந்த அநீதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இதுநாள் வரை எந்தவொரு எம்.பி.,  அல்லது எம்எல்ஏ-வையும் நேரில் கண்ட தில்லை என்று கண்ணீருடன் தெரி வித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குரல் கொடுத்த பிறகே ஊடகங்களின் கவனம் இப்பக்கம் திரும்பியுள்ளதாக ஏ.ஏ.ரஹீம் எம்.பி., சுட்டிக்காட்டினார். கண்டனம் சங்பரிவார் பாணியிலான புல்டோ சர் அரசியலை இப்போது காங்கிரஸ் அரசும் கையில் எடுத்துள்ளது. பணக்கா ரர்களின் சட்டவிரோத கட்டுமானங் களை நோக்கிச் செல்லாத புல்டோ சர்கள், குரலற்ற ஏழைகளின் வீடுகளை  மட்டும் குறிவைப்பது ஏன்? நாம் இவர்களின் குரலாக மாற வேண்டியது அவசியம் என ஏ.ஏ. ரஹீம் எம்.பி., தனது முகநூல் பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கர்  நாடக மாநிலக் குழுவினர் இப்போராட் டத்தில் முன்னின்று களப்பணியாற்றி வருகின்றனர்.