நூல் வெளியீட்டு விழா
கோவை, பிப்.2- “காடு - கடல் இனி நமக்கில்லை” என்ற நூல் வெளியீட்டு விழா கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் எழுதிய “காடு - கடல் இனி நமக்கில்லை” என்ற நூல் வெளியீட்டு விழா, கோவை தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. பழங்குடி மக்க ளின் பாடல்கள், இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வில், பழங்குடியின மருத்துவ மாணவி எம்.சங்கவி நூலினை வெளி யிட்டார். ஓசை காளிதாசன், பசுமைப் போராளி மா.யோகநா தன், சூழலியல் எழுத்தாளர் கோ.லீலா, பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ப.கருப்புசாமி, தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பின் கே.பாலன் மற்றும் பலர் நூலை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.பொன்னுசாமி கருத் துரையாற்றினார். நூலாசிரியர் மு.ஆனந்தன் ஏற்புரையாற்றி னார். இதில், எழுத்தாளர் ச.பாலமுருகன், பழங்குடி மக்கள் செயற்பாட்டாளர் வி.எஸ்.பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், க.பிரியங்கா நன்றி கூறினார்.
