tamilnadu

அசாமில் இன உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி

அசாமில் இன உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி

சீத்தாராம் யெச்சூரி நகர், (மதுரை), ஏப். 6 - அசாமில் இன உணர்வைத் தூண்டி அரசி யல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இஸ்பாகுர் ரஹ்மான் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது மாநாட்டில் பங்கேற்றுள்ள இஸ்பாகுர் ரஹ்மான் சனிக்கிழமை கூறியதாவது:- ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ஆட்சியில், அசாம் மாநிலத்தில் ஊழல் பெருகி விட்டது. மூன்று பெரிய செயற்கைக்கோள் சேனல் கள், 28-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட் டங்கள், ஒரு சர்வதேசப் பள்ளி, ஹோட்டல் கள், ரிசார்ட்டுகள் மற்றும் பல்வேறு மாவட் டங்களில் நிலங்களை வைத்திருப்பது முதல மைச்சரின் குடும்பத்தினர் தான். ஆர்எஸ்எஸ் - அமைப்பின் வெறித்தன மான வகுப்புவாத அரசியலை பாஜக முன் னெடுத்துச் செல்கிறது. அரசியல், பொருளா தாரக் காரணங்களுக்காக அசாமில் தீவிர முஸ்லிம் வெறுப்பை பரப்புவதில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் உள்ளார். காங்கிரசிலிருந்து பாஜக-வில் ஐக்கியமான சர்மா, ஆர்எஸ்எஸ் அமைப்பை விட, தாம் தான் ஒரு பெரிய இந்துத்துவா வாதி என்று காட்டிக் கொள்கிறார். பிஸ்வா சர்மா தனது மனைவி ரினிகி புயன் ஷர்மா  பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித் துள்ளார். தாங்கள் முறைகேடாக வாங்கி யுள்ள சொத்துக்கள், ஊழலை மறைக்க முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. வெறுப்புப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் முஸ்லிம் கள். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனக் கூறுகின்றனர். இவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. வீடுகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படுகின்றன. விலைவாசி உயர்வுக்கு எதிராக வீதி நாடகம் நடத்திய இளைஞரும், ஒரு பெண் ணும் சிறையில் அடைக்கப்பட்டனர். வீதி நாட கத்தில் சிவனையும் பார்வதியையும் அவ மதித்ததாக இவர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டது. ஊழலுக்கு எதிராகவும், சிறு பான்மையினரை வேட்டையாடுவதற்கும் எதி ராக குரல் எழுப்புபவர்களை உல்பா வேட்டை யாடுகிறது. மத நல்லிணக்கத்திற்கு அடை யாளமாகத் திகழும் அசாமில், வகுப்புவாதக் கலவரங்களை சந்தித்ததில்லை. வெகுஜன வகுப்புவாத வன்முறையும் இல்லை. ஆனால், வகுப்புவாத சக்திகளை வளர்த்து விடும் வேலையில் பாஜக குறியாக உள்ளது.  2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடி யுரிமைப் பிரச்சனைக்காக அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நடத்தினர். வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இது பாஜக-வின ரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது இன உணர்வைத் தூண்டி, மக்களைப் பிளவுபடுத்துவதன் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது” என்றார். - தேசாபிமானி உதவியுடன்