tamilnadu

img

அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டில் அம்பேத்கரை அவமதிக்கும் பாஜக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கண்டனம்

திண்டுக்கல், டிச.28 - நாட்டின் அரசியலமைப்பு சட்டத் தின் 75 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், அதை உருவாக்கிய அம்பேத்கரையே அவ மதிக்கும் பாஜக அரசின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கடுமையாக சாடினார். விவசாயிகளுக்கு துரோகம் திண்டுக்கல்லில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன்  நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற் கொண்ட அவர் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு, தொழி லாளர்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு  துரோகம் இழைத்து வருகிறது. அரசி யலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது” என்றார்.

அம்பேத்கரின் பங்களிப்பு

“உலக நாடுகளின் அரசியல மைப்புச் சட்டங்களை ஆய்ந்து, இந்தி யாவிற்கு ஏற்ற வகையில் அற்புத மான அரசியலமைப்பை டாக்டர் அம் பேத்கர் உருவாக்கினார். இதில் எந்தக் கட்சிக்கும் உரிமை கிடையாது. இது நாட்டு மக்களின் பெருமை” என்று சுட்டிக்காட்டினார். ஆர்எஸ்எஸ் கருத்தின் பிரதிபலிப்பு “அம்பேத்கர் பெயரை உச்சரிப்ப தற்கு பதிலாக சில கடவுள்களின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத் திற்கு சென்றிருப்பீர்கள் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கொச்சைப் படுத்தியுள்ளார். இது ஆர்எஸ்எஸ் கொள்கையின் வெளிப்பாடு. இந்த நாட்டின் அரசியலமைப்பையும், தேசியக் கொடியையும் ஏற்காத அமைப்பு  ஆர்எஸ்எஸ்” என்று குற்றம்சாட்டினார்.

ராகுல் மீது பொய் வழக்கு

“நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி  தாக்கிவிட்டதாக பாஜக எம்.பி., கூறு கிறார். சிறு காயத்திற்கு ஐசியுவில் சிகிச்சை பெற்று பேட்டி அளிக்கிறார். மேலும் ஒரு பெண் எம்.பி.யை வைத்து ராகுல் மீது பாலியல் குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது. நாடாளு மன்ற ஜனநாயகத்தையே பாஜக கேலிக் கூத்தாக்குகிறது” என்று விமர்சித்தார். தேர்தல் சீர்திருத்தம் அவசியம் “இந்தியா கூட்டணிக்கும், என்டிஏ  கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் 1.9 சதவீதம் மட்டுமே. ஆனால் எதிர்க் கட்சிகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு  கட்சியும் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இதுவே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்” என்றார். தமிழகத்திற்கு தொடர் நிதி மறுப்பு “தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மறுக்கப்படுகிறது. விழுப்புரத்தில் மட்டும் 2,000 கோடிக்கு மேல் பயிர்  சேதம். வழக்கமான நிதி தவிர கூடுதல்  நிவாரணம் எதுவும் வழங்கப்பட வில்லை. கல்வி நிதி, ரயில் திட்டங்கள்  என அனைத்திலும் தமிழகம் புறக் கணிக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல் மருத்துவமனையில் புதிய திட்டம்

“திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.292 கோடியில் உயர் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், மூளை நரம்பியல், புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்த கோரிக்கை “நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ.5 கோடி மட்டுமே. ஆறு சட்ட மன்றத் தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிக்கு இது மிகவும் குறைவு. குறைந்தபட்சம் ரூ.20  கோடியாவது வழங்க வேண்டும் என்று  கோரியுள்ளோம்” என்றார். திண்டுக்கல்லில் விமான நிலையம்  அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வும், ஆவின் ரவுண்டானா பகுதியில் மார்ச் மாதத்திற்குப் பிறகு ஹைமாஸ்ட் விளக்கு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர்  ராஜப்பா, சிபிஎம் மாவட்டச் செயலாளர்  கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகரச் செயலா ளர் ஏ.அரபு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உள்ளிட்ட  கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட னர்.