tamilnadu

img

‘தோழர் ஜி.ரத்தினவேலுவுக்கு அகவை 92’ கரூரில் பிறந்த நாள் கொண்டாட்டம்

‘தோழர் ஜி.ரத்தினவேலுவுக்கு அகவை 92’ கரூரில் பிறந்த நாள் கொண்டாட்டம்

கரூர், ஜன.1 - அகவை 92-இல் அடியெடுத்து வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ரத்தின வேலுவின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் மாநிலக் குழுஉறுப்பினரும், ஒன்றுபட்ட திருச்சி மற்றும்  கரூர் மாவட்ட முன்னாள் செயலாளருமான தோழர் ஜி.ரத்தினவேலுவின் 92 ஆவது  பிறந்தநாள் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.  கரூர் மில்ஸ் நூற்பாலையில் தொழி லாளியாக வாழ்க்கையை துவங்கிய  தோழர் ஜி.ரத்தினவேலு, கட்சியின்  வேண்டுகோளை ஏற்று வேலையை  ராஜினாமா செய்தார். கரூர் மாவட்டத் தில் எண்ணற்ற போராட்டங்களை தலை மையேற்று நடத்தினார். குறிப்பாக கரூர் மில்ஸ் முதலாளியின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம், கூட்டுறவு நூற்பாலை, திரு வளர் மில்ஸ் போராட்டம், புகளூர் சர்க்கரை மில் போராட்டம் மற்றும் எல்ஜிபி தொழிலாளர்களின் போராட்டம்  ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்தி யவர். எல்ஜிபி போராட்டத்தின் போது, அன்றைய காவல்துறை அதிகாரி தேவா ரம் இவரை பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உதைத்தார். அதை உறுதியாக எதிர்த்து போராடியவர், பலமுறை சிறை சென்றவர். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் தொழிற்சங்க பணிகளுக்காக கரூரி லிருந்து திருச்சிக்கு அனுப்பப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்க வேலைகளில் முக்கிய பங்காற்றியவர். திருச்சி மாவட்டச் செய லாளராக 19 ஆண்டுகளும், கரூர்  மாவட்டச் செயலாளராக 4 ஆண்டு களும் என மொத்தம் 23 ஆண்டுகள்  மாவட்டச் செயலாளராக பணியாற்றி யவர். தோழர்கள் உமாநாத், பாப்பா  உமாநாத், பி.ராமச்சந்திரன், கே.வரத ராஜன், டி.கே.ரெங்கராஜன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணி யாற்றியவர். வயது மூப்பின் காரண மாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் பட்டாலும் இன்று வரை தன்னை இயக்கங்களோடு இணைத்துக் கொண்டு  பணியாற்றி வருகிறார். கட்சியின் கரூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு, கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.    மருத்துவர் மா.பாலசுப்பிரமணி, திருமாநிலையூர் கிளைச் செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணி மற்றும் தோழர் ஜி. ரத்தினவேலுவின் குடும்பத்தினர் கலந்து  கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பி னர்  ஆர்.ஹோச்சுமின் நன்றி கூறினார்.