மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பிள்ளையார் சிலை துணைவேந்தர் கிருஷ்ணனின் ஆசியுடன் நிறுவப்பட்டது. இதற்குஇந்திய மாணவர் சங்கம், வாலிபர்சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சிலை அகற்றப்பட்டது. சிலைக்காக கட்டப்பட்ட பீடத்தில் பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாரதிய ஜனதாகட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதி புகுத்தப்பட்டுள்ளார். இவர் சாஸ் திரா பல்கலைக்கழக பேராசிரியரும் கூட. பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக தலைவரை நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. கல்வியை காவியமாக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த நியமனம் என்கின்றனர் கல்வியாளர்கள். இது ஆபத்தான போக்கு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாரதியார் பல்கலைக்கழக சட்டத் தின்படி, சிண்டிகேட் உறுப்பினராக மூன்று கல்வி வல்லுநர்கள் பரிந்துரைக்க வேண்டும். இதை கவனத்தில் கொள்ளாமல் பாஜக மாநிலத் தலைவர்நியமிக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசியல் கட்சியில் மாநில அளவில் பதவிவகிக்கும் ஒருவரை நியமனம் செய்வது கல்வி சமூகத்திற்கு தவறான சமிக்ஞைகளை அனுப்புவதாகவும், பரிந்துரைக்கப் பட்டவர் தனது சித்தாந்தத்தை ஊக்குவிக்க வழிவகுக்கும் என்கிறார் ஏயுடி தலைவர் பசுபதி.பாஜக தலைவர் சிண்டிகேட் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவார். தனது கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவருவது அவருக்கு எளிதானது என்றும் அவர் கூறியுள்ளார். பி.கனகசபாபதி தவிர கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் சி.ஏ.வாசுகியும் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.