தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்
தஞ்சாவூர், ஏப்.30 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையில், பாவேந்தர் பாரதிதாசனின் 135 ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளை சொற் பொழிவு கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொழிபெயர்ப்புத் துறைத் தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலரும், இணைப் பேராசிரியருமான இரா.சு.முருகன் வரவேற் றார். தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய, பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியப் படைப்புகளில் மொழிபெயர்ப்புத் திறன்கள் என்னும் பொருண்மையிலான நூல் வெளியீடும் நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வளர்தமிழ்ப் புல முதன்மையரும், அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவரு மான முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் வாழ்த்திப் பேசினார். மொழிபெயர்ப்புத் துறையின் முன்னாள் தலைவரும், தமிழ்வளர் தமிழ்ப்புல முதன்மையருமான ச.இராதாகிருட்டிணன், ‘பாரதிதாசனின் படைப்புகளில் மொழிபெயர்ப்புத் திறன்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில், ஆய்வாளர்கள் 5 அமர்வுகளில் கட்டு ரைகளை வழங்கினர். முனைவர்கள் கு.சிவக்குமார், லெ. ராஜேஷ், ஆகாஷ், செ.த. ஜாக்குலின் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாகப் பங்கேற்று நடத்தினர். புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், பணி யாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மொழிபெயர்ப்புத் துறையின் இணைப் பேராசிரியர் ப.இராஜேஷ் நன்றி கூறினார்.