ஒரே இரவில் 105 மி.மீ. அளவில் புரட்டியெடுத்த கனமழை 2ஆவது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு
3 பேர் பலி ; 500 வீடுகள் சேதம் ; போக்குவரத்து துண்டிப்பு
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கள் காலை 8.30 மணி வரை 24 மணிநேரத்தில் 130 மிமீ (ஒரே இரவு 105 மிமீ) அளவில் பெய்த கனமழையின் விளைவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2ஆவது நாளாக (செவ்வாய்க்கிழ மை) வெள்ளத்தில் சிக்கி இயல்பு நிலையை இழந்துள்ளது.
மழைநீர் வடிகால்களை விட அதிகம்
கெங்கேரி (132 மிமீ), வடேரஹள்ளி (131 மிமீ), சிக்கபனாவரா (127 மிமீ), சவுடேஷ்வரிநகர் (104 மிமீ) மற்றும் கெம்பேகவுடா வார்டு (103.5 மிமீ) ஆகிய இடங்களில் அதீத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்குறிப்பிட்ட கனமழையின் அளவு பெங்களூருவின் மழைநீர் வடிகால்களின் 70 மிமீ கொள்ளளவை விட மிக அதிகமாகும். குறிப் பாக கோரமங்கலா, பசவனகுடி, மாரத்தஹள்ளி மற்றும் எச்ஏஎல் விமான நிலையம் போன்ற பிற பகுதிகளிலும் 90 மிமீக்கு மேல் மழை பதிவாகி யுள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை என வானிலை ஆய்வு மையங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
500 வீடுகள் சேதம்
கனமழையில் சிக்கி பெங்களூருவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மகா தேவபுராவில் குறைந்தது 10 இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாய் லே அவுட் பகுதி முழுமையாக நீரில் மூழ்கியது. தெருக்கள் நீரோடை களாக மாறின. 44 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 93 இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. 27 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் 43 மரங்களின் கிளைகள் விழுந்தன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற்ற மாநில பேரிடர் மீட்புப் படை படகுகளை அனுப்பி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகர் - புறநகர் இடையேயான போக்குவரத்து முற்றி லும் துண்டிக்கப்பட்டுள்ளது.
3 பேர் பலி
தெற்கு பெங்களூருவில் உள்ள பிடிஎம் லே அவுட் 2ஆவது ஸ்டேஜில் உள்ள மதுவானா அடுக்கு மாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததை வெளியேற் றும் போது, மன்மோகன் காமத் (63) மற்றும் குடி யிருப்பின் பாதுகாவலரின் மகன் தினேஷ் (12) ஆகி யோர் திங்கள்கிழமை மாலை 6.15 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அதே போல வைட்பீல்டில் வீட்டு பராமரிப்புப் பணியாளரான சசிகலா (32) கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். கனமழையில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதீத கனமழை தொடரும்
ஏற்கெனவே பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழையால் தத்தளித்து வரும் நிலையில், மே 21, மே 22 ஆகிய இரண்டு நாட்கள் கடலோர கர்நாடகப் பகுதிகளில் அதீத கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (அதீத கனமழை) எச்ச ரிக்கையை விடுத்துள்ளது. 204.5 மிமீக்கு மேல் அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் என்றும், கடலோர கர்நாட கப் பகுதிகளில் மே 26ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கையுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மோசமான வானிலை காரணமாக மே 23ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெற்கு கன்னடா மற்றும் உடுப்பி மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதே போல கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக துறைமுகங்களுக்குத் திரும்ப அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.